பார்வை இருந்தும் இருளில் தவிக்கும் மக்கள்: விஜயகாந்த்
Posted On 10/5/08 at by citizenசென்னை: பார்வையற்றவர்கள் இருளைப் பற்றி கவலைப்படாமல் செல்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு இன்றைக்கு இருண்டு போய் இருப்பதால் வெளிச்சம் இல்லாமல் நாம் வீட்டைவிட்டு வெளியே இருக்கும் சூழ்நிலையில் இருக்கிறோம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.தேமுதிக சார்பில் பார்வையற்றோருக்கான 'கேப்டன் வாழ்வொளித் திட்டம்' தொடக்க விழா இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, மாநில இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் முன்னிலை வகித்தனர்.திட்டத்தை கட்சித் தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மாஃபா பாண்டியராஜன் இந்தத் திட்டம் குறித்து விளக்கினார்.இத்திட்டத்தில் முதல் கட்டமாக சேர்ந்து பயிற்சி பெறவுள்ள 300 பார்வையற்றோருக்கு பிரேம லதா அடையாள அட்டைகளை வழங்கினார்.7 பார்வையற்றோருக்கு தொழில் முனைவோருக்கான முதலீட்டுத் தொகையாக தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.1.75 லட்சத்தை விஜயகாந்த் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ர்வையற்றவர்களால் வெளிச்சத்தை காண முடியவில்லை. ஆனால் நாட்டில் சிலர் பார்வையிருந்தும் பார்வையில்லாதவர்களாக இருக்கிறார்கள்.என்னுடைய ரசிகர் மன்றத்தை கட்சியாக மாற்றிய நாளில் பார்வையற்றவர்களை வைத்துதான் நான் பாட்டுக் கச்சேரி நடத்தினேன்.மற்ற அரசியல் கட்சிகளில் ஊனமுற்றோருக்கென தனி அணி கிடையாது. ஆனால் தேமுதிகவில் மட்டும் ஊனமுற்றோர் அணி உள்ளது.திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக குத்து விளக்கேற்றியதும் ஒளி கிடைத்தது. ஆனால் இன்றைக்கு திமுக ஆட்சியில் தமிழகம் இருண்டுப் போய் உள்ளது.பார்வையற்றவர்கள் இருளைப் பற்றி கவலைப்படாமல் செல்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு இன்றைக்கு இருண்டு போய் இருப்பதால் வெளிச்சம் இல்லாமல் நாம் வீட்டைவிட்டு வெளியே இருக்கும் சூழ்நிலையில் இருக்கிறோம்.சிலர் ஓட்டுக்காக மட்டும் பார்வையற்றவர்களை அணுகுவார்கள். அவர்களுடைய ஓட்டுக்களை பெற வாக்குறுதிகளையும் அள்ளி வீசுவார்கள். ஆட்சிக்கு வந்ததும் அவற்றை மறந்துவிடுவார்கள்.ஆனால் தேமுதிக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேமுதிக சார்பில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவேன் என்று தெரிவித்தேன். அது முடியுமா என்று சிலர் கேட்டார்கள். நிச்சயமாக முடியும் என்று மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த வாழ்வொளித் திட்டத்தின் மூலம் பார்வையற்றவர்களுக்கு ஆளுமைத் திறன் பயிற்சி, சுய தொழிலுக்கு வழிகாட்டல், கணினி அடிப்படை கல்வி, பார்வையற்றவர்களுக்கான சிறப்பு மென்பொருள் பயிற்சி ஆகிய பயிற்சிகள் 3 மாதங்களுக்கு 60 கணினி பயிற்சி மையங்களில் அளிக்கப்படும். அத்துடன் அவர்கள் வேலை வாய்ப்பு பெறவும், சொந்தமாக தொழில் தொடங்கவும் ஏற்பாடுகள் செய்து தரப்படும்.கடந்த ஆண்டு எனது பிறந்த நாளின்போது ரூ.25 லட்சம் செலவில் பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினேன். இந்த ஆண்டு ரூ.1.5 கோடி செலவில் தமிழ்நாடு முழுவதும் 60 இலவச கணினி பயிற்சி மையங்கள் தொடங்கியிருக்கிறோம்.அதன் தொடர்ச்சியாக தற்போது பார்வையற்றவர்களுக்கான வாழ்வொளித் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். என்னோடு அரசியலில் பல்வேறு கட்சியினர் போட்டிப் போடுகிறார்கள். அவர்கள் இதுபோன்ற நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் போட்டி போடலாமே? என்றார்.
நன்றி: த்ட்ஸ் தமிழ்
இவண்- ரவிகுமார் (சென்னை)

Captain speech true ..for current news Latest Tamil News updates
A powerful Forex trading platform is essential for navigating the global currency markets with confidence and efficiency. It provides traders with real-time market data, advanced charting tools, technical indicators, and fast trade execution to help identify opportunities and make informed decisions. Whether you are a beginner learning the fundamentals or an experienced trader refining your strategies, a reliable forex trading platform offers the tools and flexibility needed to manage trades effectively. With user-friendly features, secure transactions, and access to multiple currency pairs, it serves as the foundation for a seamless and rewarding trading experience.