பார்வை இருந்தும் இருளில் தவிக்கும் மக்கள்: விஜயகாந்த்


சென்னை: பார்வையற்றவர்கள் இருளைப் பற்றி கவலைப்படாமல் செல்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு இன்றைக்கு இருண்டு போய் இருப்பதால் வெளிச்சம் இல்லாமல் நாம் வீட்டைவிட்டு வெளியே இருக்கும் சூழ்நிலையில் இருக்கிறோம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.தேமுதிக சார்பில் பார்வையற்றோருக்கான 'கேப்டன் வாழ்வொளித் திட்டம்' தொடக்க விழா இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, மாநில இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் முன்னிலை வகித்தனர்.திட்டத்தை கட்சித் தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மாஃபா பாண்டியராஜன் இந்தத் திட்டம் குறித்து விளக்கினார்.இத்திட்டத்தில் முதல் கட்டமாக சேர்ந்து பயிற்சி பெறவுள்ள 300 பார்வையற்றோருக்கு பிரேம லதா அடையாள அட்டைகளை வழங்கினார்.7 பார்வையற்றோருக்கு தொழில் முனைவோருக்கான முதலீட்டுத் தொகையாக தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.1.75 லட்சத்தை விஜயகாந்த் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ர்வையற்றவர்களால் வெளிச்சத்தை காண முடியவில்லை. ஆனால் நாட்டில் சிலர் பார்வையிருந்தும் பார்வையில்லாதவர்களாக இருக்கிறார்கள்.என்னுடைய ரசிகர் மன்றத்தை கட்சியாக மாற்றிய நாளில் பார்வையற்றவர்களை வைத்துதான் நான் பாட்டுக் கச்சேரி நடத்தினேன்.மற்ற அரசியல் கட்சிகளில் ஊனமுற்றோருக்கென தனி அணி கிடையாது. ஆனால் தேமுதிகவில் மட்டும் ஊனமுற்றோர் அணி உள்ளது.திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக குத்து விளக்கேற்றியதும் ஒளி கிடைத்தது. ஆனால் இன்றைக்கு திமுக ஆட்சியில் தமிழகம் இருண்டுப் போய் உள்ளது.பார்வையற்றவர்கள் இருளைப் பற்றி கவலைப்படாமல் செல்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு இன்றைக்கு இருண்டு போய் இருப்பதால் வெளிச்சம் இல்லாமல் நாம் வீட்டைவிட்டு வெளியே இருக்கும் சூழ்நிலையில் இருக்கிறோம்.சிலர் ஓட்டுக்காக மட்டும் பார்வையற்றவர்களை அணுகுவார்கள். அவர்களுடைய ஓட்டுக்களை பெற வாக்குறுதிகளையும் அள்ளி வீசுவார்கள். ஆட்சிக்கு வந்ததும் அவற்றை மறந்துவிடுவார்கள்.ஆனால் தேமுதிக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேமுதிக சார்பில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவேன் என்று தெரிவித்தேன். அது முடியுமா என்று சிலர் கேட்டார்கள். நிச்சயமாக முடியும் என்று மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த வாழ்வொளித் திட்டத்தின் மூலம் பார்வையற்றவர்களுக்கு ஆளுமைத் திறன் பயிற்சி, சுய தொழிலுக்கு வழிகாட்டல், கணினி அடிப்படை கல்வி, பார்வையற்றவர்களுக்கான சிறப்பு மென்பொருள் பயிற்சி ஆகிய பயிற்சிகள் 3 மாதங்களுக்கு 60 கணினி பயிற்சி மையங்களில் அளிக்கப்படும். அத்துடன் அவர்கள் வேலை வாய்ப்பு பெறவும், சொந்தமாக தொழில் தொடங்கவும் ஏற்பாடுகள் செய்து தரப்படும்.கடந்த ஆண்டு எனது பிறந்த நாளின்போது ரூ.25 லட்சம் செலவில் பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினேன். இந்த ஆண்டு ரூ.1.5 கோடி செலவில் தமிழ்நாடு முழுவதும் 60 இலவச கணினி பயிற்சி மையங்கள் தொடங்கியிருக்கிறோம்.அதன் தொடர்ச்சியாக தற்போது பார்வையற்றவர்களுக்கான வாழ்வொளித் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். என்னோடு அரசியலில் பல்வேறு கட்சியினர் போட்டிப் போடுகிறார்கள். அவர்கள் இதுபோன்ற நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் போட்டி போடலாமே? என்றார்.

நன்றி: த்ட்ஸ் தமிழ்

இவண்- ரவிகுமார் (சென்னை)

Posted in | 1 comments

எந்திரன் விளம்பர படங்கள்...........!!



எந்திரன் வெற்றி பெற தமிழ்துளியின் வாழ்த்துக்கள் ..............!!

Posted in | 1 comments

ப்ரியாமணிக்கு தேசிய விருது.....!!



சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணிக்கு
தமிழ்துளியின் உளமிகுந்த வாழ்த்துக்கள் .......!!!!

Posted in | 0 comments

முஷாரபை கைகழுவுகிறார் அதிபர் புஷ.....!!

http://pakobserver.net/200805/19/todayspic/19052008-front.jpg

அதிபர் பதவியில் இருந்து முஷாரப் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் யூசுப் ரசா கிலானியுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் புஷ், பாகிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் தனது நிர்வாகம் தொடர்ந்து அளிக்கும் என்று உறுதி கூறியுள்ளார். கிலானியுடன் பேசிய புஷ், பாகிஸ்தானின் புதிய அதிபர் தேர்தல் குறித்தும் பேசினார். அதே போல, அதிபர் அதிகாரத்தையும் பார்லிமென்ட் அதிகாரத்தையும், வகைப்படுத்துவது எப்போது என்பது குறித் தும் அவர் கேட்டார். "அதிபர் தேர்தல் குறித்து அனைத்து விஷயங்களையும், தேர்தல் தேதியையும் முடிவு செய்யும் முழு அதிகாரம் தேர்தல் கமிஷனுக்குத் தான் உண்டு. பார்லிமென்ட் மற்றும் அதிபர் அதிகாரங்களை சமப்படுத்தும் வகையில், மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று கிலானி தெரிவித்தார்."பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே வலுவான உறவு நீடிக்கிறது. பாகிஸ்தானின் ஜனநாயக அரசுக்கு அனைத்து உதவிகளும் தொடர்ந்து அளிக்கப்படும்' என்று புஷ் கூறினார். உரையாடலின் போது, ஒலிம்பிக் போட்டி துவக்கவிழாவின் போது, கிலானியுடன் நடந்த சந்திப்பு குறித்து நினைவு கூர்ந்த புஷ், முன்னாள் பிரதமர் பெனசிரின் குழந்தைகளை தனக்கு அறிமுகப்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தார். அப்போது, பெனசிரின் குழந்தைகளும், புஷ்சை சந்தித்து பேசியதால் பெரிதும் உற்சாகத்தில் இருப்பதாகவும், அவர்களைப் போலவே, பெனசிரின் கணவரும் மகிழ்ச்சியில் இருப் பதாகவும் கிலானி கூறினார்.


பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுவடைய தொடர்ந்து அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த கிலானி, இதற்காக அரசும், மக்களும் அமெரிக்காவுக்கு நன்றியுள்ளவர்களாக இருப் பதாகவும் கூறினார். பின்னர், பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து தனது இரங்கலை புஷ் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு எப். 16 ரக விமானங்களை வழங்கியதற்காகவும், பழைய எப் - 16 விமானங்களை மேம்படுத்த 465 கோடி ரூபாய் நிதி வழங்கியதற்கும் கிலானி நன்றி தெரிவித்தார்.அதே போல, முஷாரப்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட புஷ், பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்புவதற்கு அவர் எடுத்த முயற்சிக்கு நன்றி தெரிவித்தார். அதே போல, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், முஷாரப் அளித்த ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார். முடிவு அமெரிக்கா கையில்: இந்த டெலிபோன் பேச்சு, மாறிவரும் பாகிஸ் தான் சூழ்நிலையை புஷ் ஆதரிப்பதாகக் காட்டுகிறது. பாகிஸ்தானில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால், அது முதலில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் கண்டலீசா ரைசால் அனுமதிக்கப்பட வேண் டும் என்று கூறுகின்றனர். தற்போது பாக்., அதிபர் முஷாரப் பதவி விலக அமெரிக்கா, ராணுவம், சவுதி அரேபியா ஆகிய மூன்று சக்திகள் செயல் பட்டிருக்கின்றன. பாகிஸ்தான் நலனைவிட, முஷாரபின் நட்பு அல் லது நெருக்கம் தேவையில்லை என்று ராணுவத் தளபதி கியானி முடிவு செய்துவிட்டார்.

இப்போது கிலானியுடன் டெலிபோனில் பேசியபின் அதிபர் முஷாரபிடம் பேசியிருக்கிறார். அதற்குமுன் கடந்தவாரத்தில் முஷாரப் நெருக்கடிகளைச் சந்தித்த போது அதிபர் புஷ்ஷிடம் பேச முடியவில்லை. பத்து நாட்களுக்கு முன் சவுதி நாட்டின் உளவுத் துறைத் தலைவர் இளவரசர் முக்ரீன் பின் அப்துல் அசீஸ் இஸ்லாமாபாத் வந்து நவாஸ், சர்தாரி உட்பட எல்லாத் தலைவர்களுடனும் பேசியிருக்கிறார். அப்போது அவர், "எவரும் கேலி செய்து சிரிப் பிற்கு ஆளாகாத வகையில், அதே சமயம் முடிவும் காணப்பட வேண்டும்' என்று கூறியிருக்கிறார். இவை எல்லாம் பாகிஸ்தானில் அடுத்து வரும் மாற்றம் நிஜமாகவே ஜனநாயகம் வலுப்படுமா, அல்லது புதிய குழப்பத்துடன், அமெரிக்கா சொல்படி நடக்கும் நம்பிக்கை நிர்வாகம் உருவெடுக்குமா என்பது இனித் தெரியும்.

Posted in | 0 comments