காலத்தின் கோலம் :


Posted in | 0 comments

கமல்ஹாசனின் மர்மயோகியில் வித்தியாசமான இசை ஒலிகளை அறிமுகப்படுத்தும் ரஹ்மான்....!!!!!!


கமல்ஹாசனின் அடுத்த மெகா பட்ஜெட் படமான மர்மயோகியில் மிக வித்தியாசமான இசை ஒலிகளை அறிமுகப்படுத்தும் ஐடியாவில் உள்ளார் ரஹ்மான்.
இந்தப் படத்துக்காக, இதுவரை தமிழ் திரையில் ஒலித்திராத லத்தீன் அமெரிக்க பாணி இசைக் கருவிகளை மர்மயோகிக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளார் ரஹ்மான்.
சமீபத்தில் ஒரு இசைவிழாவுக்கு வந்திருந்த ரஹ்மானிடம் இதுபற்றிக் கேட்டபோது, நான் எல்லா படங்களுக்குமே பெஸ்ட் இசையைத் தரவே முயற்சிக்கிறேன். முயற்சிதான் என்னுடையது. மற்றபடி பாடல்களின் தலைவிதி ரசிகர்களின் மன நிலையைப் பொறுத்தே அமைகிறது. சில நேரங்களில் அதிகபட்ச விளம்பரங்கள் கூட ஒரு இசையை திரும்பத் திரும்ப கேட்க வைத்து விடும்.
ஆனால் உண்மையான இசை எப்போதும் நிலைத்திருக்கும். மர்மயோகி ஒன்லைன் மட்டும்தான் எனக்குத் தெரியும். வித்தியாசமான ஒரு முயற்சி. அதற்கு வித்தியாசமான இசையைத் தரவே முயற்சிக்கிறேன்.
இதில் சில புதிய ஒலிகளை அறிமுகப்படுத்த லத்தீன் அமெரிக்க இசைக் கருவிகளை உபயோகிக்கும் திட்டம் உள்ளது. இசைக்கு நல்ல ஸ்கோப் உள்ள கதை என்பதால் உங்கள் எதிர்பார்ப்புகளை பொய்யாக்காத அளவுக்கு பாடல்கள் இருக்கும் என்றார் அடக்கமாக.
சமீபத்தில் உங்களை நடிக்க வைக்கும் திட்டத்தில் இருப்பதாக பாரதிராஜா கூறினாரா... அப்படி ஏதாவது எண்ணமிருக்கிறதா?
(சிரிக்கிறார்) அவர் என்மீதுள்ள அன்பில் அப்படிச் சொல்லியிருப்பார். இசைக்கே நேரம் ஒதுக்க முடியவில்லை என்றார்.
சமீபத்தில் வெளியான இசை ஆல்பங்களில் குசேலனுக்கு அடுத்து அதிக சிடிக்கள் விற்று சாதனை படைத்துள்ளது ரஹ்மானின் சக்கரகட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியில் அவர் இசையைத்து வெளிவந்துள்ள ஜானே து ய ஜானே நா பெரும் சாதனை புரிந்து வருகிறது.

. ரவிக்குமார் ( சென்னை)

Posted in | 1 comments

வெள்ளித்திரையில் தோன்றுகிறார் சச்சின் ....!!!!!


இதுவரை விளம்பரப் படங்களில் மட்டுமே நடித்து வந்த உங்கள் சச்சின் டெண்டுல்கர் முதல் முறையாக வெள்ளித் திரையிலும் தனது நடிப்பாற்றலைக் காட்ட வருகிறார்.
கடவுள் கணேசரின் திருவிளையாடல்களை விளக்கும் பாலிவுட் படம் ஒன்றில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் சினிமாவிலும் அவ்வப்போது தலை காட்டுவது சகஜமாகி வருவது. அந்த வகையில் சச்சின் டெண்டுல்கரும் நடிக்க வருகிறார்.
விக்னஹர்த்த ஸ்ரீ சித்திவிநாயக் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் கிரிக்கெட் வீரராகவே சச்சின் நடிக்கிறார். இதுகுறித்து இப்படத்தை தயாரிக்கும் ராஜீவ் சிங்வி கூறுகையில், சிறிய ரோலில் சச்சின் நடிக்கிறார். ஒரு பாடல் காட்சியிலோ அல்லது கிரிக்கெட் விளையாடுவது போன்றோ சச்சின் நடிப்பார்.
சச்சின் விநாயகரின் பக்தர். எனவே இந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கேட்டதும் அவர் ஒப்புக் கொண்டார். இலவசமாக நடித்துத் தரவும் ஒப்புக் கொண்டுள்ளார் என்றார் சிங்வி.
இப்படத்தை மும்பையில் உள்ள பிரபல சித்திவிநாயக் கோவில் அறக்கட்டளை தயாரிக்கிறது.
அறக்கட்டளை தலைவர் சுபாஷ் மேயகர் கூறுகையில், சித்திவிநாயக் கோவிலுக்கு பல வருடங்களாக சச்சின் வந்து செல்கிறார். தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு விநாயகர் பல வழிகளிலும் உறுதுணையாக இருப்பதால் இந்த படத்தில் நடிக்க அவர் மனமுவந்து ஒத்துக் கொண்டார் என்றார்.
தற்போது இலங்கை டெஸ்ட் பயணத்தில் இருக்கும் சச்சின் அதை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் ஷூட்டிங்குக்குப் போகிறாராம். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தில் அமிதாப் பச்சன் தனது குரலை கொடுக்கவுள்ளாராம்.
சச்சினை 'பெப்சி' கைவிட்டாலும் 'பிள்ளையார்' கைவிடவில்லை. சச்சின், நல்லா நடிங்க, அப்படியே ஆட்டத்தையும் பார்த்துக்குங்க!

நன்றி -- தட்ஸ் தமிழ்
. ரவிக்குமார்( சென்னை)

Posted in | 0 comments

தீபாவளிக்கான ரயில் முன்பதிவு நிலவரம் : அனைத்து ரயில்களும் "ஹவுஸ் புல்"



அக்டோர் 27ம் தேதி தீபாவளி வருவதால் 24, 25ம் தேதிகளில் பாண்டியன், முத்துநகர், கன்னியகுமரி எக்ஸ்பிரஸ் உட்பட ஏழு எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி மற்றும் ஏ.சி., மூன்றாம் வகுப்பு டிக்கெட்கள் அனைத்தும் நேற்று ஒரே நாளில் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. ரயில் டிக்கெட் ஏஜென்டுகள் போலி பெயர்களில் முன்பதிவு செய்துவிட்டார்களோ என்று பயணிகள் சந்தேகப்படுகின்றனர். ரயில்களில் 90 நாட்கள் வரை முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் விசேஷ நாட்களுக்கான முன்பதிவு முன்கூட்டியே செய்யப்பட்டுவிடுகிறது.
அக்டோர் 27ல் திங்கள்கிழமையன்று தீபாவளி வருகிறது. 25ம் தேதி சனி, 26ம் தேதி ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் 24ம் தேதி வெள்ளிக் கிழமையும், 25ம் தேதி சனிக்கிழ�யும் பல ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வகுப்பு டிக்கெட் மற்றும் மூன்றாம் வகுப்பு ஏ.சி., டிக்கெட் முழுவதும் நேற்று ஒரே நாளில் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.
* சென்னை எழும்பூரிலிருந்து இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அக்டோபர் 23, 24, மற்றும் 25ம் தேதிகளில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வகுப்பு டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. 23ம் தேதி இருக்கை வசதிக்கு காத்திருப்போர் பட்டியலில் 60 பேரும், 24ம் தேதி 300 பேரும், 25ம் தேதி 80 பேரும் உள்ளனர். மூன்றாம் வகுப்பு ஏ.சி., வகுப்பில் அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதிகளில் அனைத்து டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. 24ம் தேதி காத்திருப்போர் பட்டியலில் 14 பேரும், 25ம் தேதி 14 பேரும் இருக்கை வசதிக்கு காத்திருக்கின்றனர்.
* கன்னியாகுமரி, முத்துநகர், நெல்லை, ராக்போர்ட், அனந்தபுரி, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதிகளில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி டிக்கெட்களும், மூன்றாம் வகுப்பு ஏ.சி., வகுப்பு டிக்கெட்களும் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இரண்டாம் வகுப்பு தூங்கும் வகுப்பு பெட்டியில் இருக்கை வசதிக்கு 80 பேரிலிருந்து 300 பேர் வரை காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதிகளில் குறைந்த இடங்களே உள்ளன. உயர் வகுப்பு டிக்கெட்களிலும் குறைந்த இடங்களே உள்ளன.
சென்னை சென்ட்ரலிலிருந்து கோவைக்கு இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் 24ம் தேதி இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி) டிக்கெட்கள், ஏ.சி., மூன்றாம் வகுப்பு டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. உயர் வகுப்பு டிக்கெட்களும் குறைந்தளவே உள்ளன.
நேற்று ஞாயிற்றுக் கிழமை. காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை தான் டிக்கெட் கவுன்டர்கள் இயங்கின. அதற்குள்ளாகவே அனைத்து முக்கிய ரயில்களின் டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதால், பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
ரயில் டிக்கெட் வாங்குவதற்கு அனுமதி பெற்ற டிராவல் ஏஜென்டுகள், போலி ஏஜென்டுகள் பண்டிகையைப் பயன்படுத்தி, டிக்கெட்களை கூடுதல் விலைக்கு விற்பதற்காக அதிகளவில் முன்பதிவு செய்திருக்கலோமோ என பயணிகள் சந்தேகப்படுகின்றனர். நேற்றைய டிக்கெட் முன்பதிவு குறித்து விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினால் விண்ணப்பங்கள் உண்மையானதா?
போலி பெயர்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதா? என தெரியவரும் என்றும் பயணிகள் கூறுகின்றனர்.

நன்றி : தினமலர்.காம்

Posted in | 1 comments

ஆடி கிருத்திகை திருவிழா : திருத்தணியில் பக்தர்கள் குவிந்தனர்

திருத்தணி: ஆடிக்கிருத்திகை முதல் நாள் தெப்பத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து முருகனை தரிசனம் செய்தனர்.திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று ஆடிக்கிருத்திகை விழா மற்றும் முதல் தெப்பத் திருவிழா சிறப்பாக நடந்தது. இதை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணி வந்தனர். பல பக்தர்கள் காவடி எடுத்து, பாத யாத்திரையாக வந்து சுவாமியை தரிசித்தனர்.மேல் திருத்தணி நல்லாங்குளம் மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்குளத்தில், பக்தர்கள் காவடியுடன் புனித நீராடினர்.
பக்திப் பாடல்கள் பாடிக் கொண்டு மலைப்படிகள் வழியாக காவடி எடுத்து, தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். பெரும்பாலானோர் காவடி எடுத்து வந்து, மொட்டை அடித்து புனித நீராடினர். சிலர் பம்பை, உடுக்கை, சிலம்பு ஆட்டத்துடன் ஆடிக் கொண்டு மலைக்கோவிலுக்குச் சென்று, சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் சிலர் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்த, உடல் முழுவதும் அலகு குத்திக் கொண்டு முருகனை வழிபட்டனர்.மூலவர் முருகனுக்கு மரகதக்கல், தங்கக் கிரீடம், தங்க வேல் மற்றும் நகை அலங்காரம், புஷ்ப அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
பழநி, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் கொண்டு வந்த பல்வேறு வகையான மலர்களால், முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. திருப்பதி மலைக்கோவிலில் இருந்து சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன. இதே போல், காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட "கியூ' வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர்.
தெப்பத் திருவிழா: நேற்று தெப்பத் திருவிழாவில் மலைக்கோவிலில் இருந்து உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை குளத்திற்கு வருகை தந்தார். மாலை 6.30 மணிக்கு தெப்பத்தில் உற்சவர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். தொடர்ந்து அபிஷேக, அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. முருகன் தெப்பத்தை மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு பாலித்தார்.
* சிவா (சென்னை) *

Posted in | 0 comments

அகமதாபாத்தில் இன்று மாலை அடுத்தடுத்து 13 இடங்களில் குண்டு வெடிப்பு...!!!!


பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பின் பயங்கரம் இன்னும் அகலாத நிலையில் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இன்று மாலை அடுத்தடுத்து 13 இடங்களில் குண்டுகள் வெடித்து நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதில் 4 பேர் பலியாகியிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
பெங்களூரில் நேற்று முன்தினம் 9 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இன்றும் அங்கு வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் குஜராத்தின் அகமதாபாத் நகரில் இன்று அடுத்தடுத்து 13 இடங்களில் குண்டுகள் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஜவஹர் செளக், சக்லா, சரங்பூர், அம்ரல்வாடி, கோவிந்த்வாடி-கிஷான்பூர், ஹத்கேஸ்வர், மணி நகர், பாபு நகர் உள்பட 13 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
சைக்கிள்கள்- டிபன் பாக்ஸ்களில்:
மாலை 6.45 மணியளவில் பாபு நகரில் முதல் குண்டு வெடித்தது.வெடிகுண்டுள் அனைத்தும் சைக்கிள்கள் மற்றும் டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்புகளில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 4 பேர் உயிரிழந்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் மணி நகர் முதல்வர் நரேந்திர மோடியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில் குண்டு வெடித்தது. அதேபோல பாபு நகரில், ரயில் நிலையத்திற்கு வெளியே குண்டு வெடித்தது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அகமதாபாத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளை போலீஸார் முற்றுகையிட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரைப் போலவே அகமதபாத்திலும் குறைந்த சக்தி கொண்ட குண்டுகளே வைக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிரதீபா பாட்டீல், மன்மோகன் சிங் கண்டனம்:
குஜராத் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்கள் அமைதி காக்க வேண்டும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மும்பை உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பும், பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாஜக மாநிலங்களில்:
நேற்று தொடர் குண்டுவெடிப்பு நடந்த கர்நாடகத்திலும், இன்று நடந்துள்ள குஜராத்திலும் பாஜக ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
(நன்றி -- தட்ஸ் தமிழ் )

இவண்,
திரு..ரவிக்குமார்(சென்னை )

Posted in | 0 comments

வெக்கம்னா என்னன்னே தெரியாது....சுவாதி ...!!!!


வெக்கம்னா என்னன்னே தெரியாத என்னையும் நடிக்க வைச்சிட்டாங்க, என்கிறார் சுப்பிரமணியபுரம் நாயகி ஸ்வாதி.
விரிந்த விழிகள், வெட்கம் சிந்தும் பார்வை, கவிதைச் சிரிப்பு என சுப்பிரமணியபுரத்தில் இளசுகளின் மனசை அள்ளியவர் 'கலர்ஸ்' ஸ்வாதி. தெலுங்கு மா டிவியில் தொகுப்பாளரான இவர், செல்வராகவனின் சூப்பர் ஹிட் தெலுங்குப் படமான ஆடவாரி மாட்டலாகு அர்த்தலே வேறுலே படத்தில் த்ரிஷாவின் தங்கையாக வந்து கலக்கினார்.
அந்தப் படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தாலும், சுப்பிரமணியபுரம் வாய்ப்பு வந்ததும் அனைத்தையும் உதறிவிட்டு இந்த படத்திலேயே முழுமையாக கவனம் செலுத்தி வந்தார்.
அதற்கான பலன் இப்போது கைமேல் கிடைத்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் நன்கு நடிக்கத் தெரிந்த புதுமுகம் என்ற அங்கீகாரத்தை தனது முதல் படத்திலேயே பெற்றுவிட்டார் ஸ்வாதி. அடுத்த படத்தைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வரும்
ஸ்வாதியின் பேட்டி:

சுப்பிரமணியபுரம் படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்த்தீர்களா?

இந்தப் படத்தை மிகவும் சின்ஸியராக எடுத்தார்கள். அந்த முயற்சிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என நம்பினேன். ஆனால் அது இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என நினைக்கவில்லை. மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

படத்தில் சாதுப் பெண்ணாக இருந்தீர்களே... நிஜத்தில் எப்படி?

அய்யோ... நான் நிஜத்தில் படு சுட்டி. ரகளைப் பேர்வழி. என்னை அந்தப் படத்தில் பார்த்துவிட்டு, ஏய்.. நீதானா அது? என்னமா கலாட்டா பண்ணுவ, இப்படி அடக்க ஒடுக்கமா நல்ல பொண்ணா எப்படி மாறினே... என எல்லாரும் கிண்டலடித்தார்கள். அந்த அளவு கலாட்டா பார்ட்டி நான்.

இந்தப் படத்தில் வெட்கப்படும் காட்சிகள் நிறையவே இருந்தன. உண்மையைச் சொல்லணும்னா, வெக்கப்படறதுன்னா என்னன்னே எனக்குத் தெரியாது.

இன்னொன்னு படம் முழுக்க முழுக்க கிராமத்தில் நடப்பது போல கதை அமைப்பு வேறு. எனக்கு கிராமமும் தெரியாது, வெக்கமும் தெரியாது (இவரல்லவா மாடர்ன் மங்கை!). இருந்தும் இயக்குநரும், யூனிட் ஆட்களும் எனக்கு மிகப் பெரிய உதவியாய் இருந்தார்கள். வெக்கப்படறது எப்படின்னு இயக்குநர் சசிகுமார்தான் சொல்லிக் கொடுத்தார். அவருக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்.

அடுத்து என்ன படம்?

தெரியல... நான் எதையுமே திட்டம் போட்டுச் செய்யறதில்ல. நிறைய வாய்ப்புகள் வருது. பார்க்கலாம்... எத்தனை படம் என்பது முகியமில்லை. ஒண்ணு ரெண்டு செஞ்சாலும் பிடிச்சமாதிரி செய்யணுமே. அவ்வளவுதான், என்கிறார்.

நல்ல பாலிஸி!

இவண்
.ரவிக்குமார் (சென்னை )

Posted in | 0 comments

மத்திய அரசு வெற்றி - பங்கு சந்தையில் என்ன நடக்கும்...??

http://www.topnews.in/files/BSE-Sensex_1.jpg
இன்சூரன்ஸ் சீர்திருத்தம், வங்கி சீர்திருத்தம் மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம். இது, இன்சூரன்ஸ், வங்கி ஆகிய துறைகளில் இன்னும் போட்டிகளையும், வெளிநாட்டு நிறுவனங்களையும் கொண்டு வரும். வெளிநாட்டு வங்கிகள், இந்திய வங்கிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டலாம். உலகளவில் இந்திய வங்கிகளின் மதிப்பை உயர்த்த, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு பற்றி மறுபடி பேசப்படலாம். பொறுமை காத்தவர்களுக்கும், சரிவில் வாங்கியவர்களுக்கும் பங்குச் சந்தை சிறிது லாபத்தை கடந்த ஐந்து நாட்களில் கொடுத்திருக்கும். வரும் நாட்களிலும் சந்தையில் சிறிது முன்னேற்றம் இருக்கலாம்.அதே சமயம் சந்தையில் கையை பெரிதாகச் சுட்டுக் கொண்டு அதிலிருந்து வெளிவரத் துடித்து கொண்டு இருப்பவர்கள் பலர். அவர்கள் எல்லா ஏற்றத்திலும் விற்று வெளியே வரவேண்டும் என்று நினைப்பதால் சந்தை அதையும் தாங்கி மேலே செல்ல வேண்டும். சந்தைக்கு சிறிய முதலீட்டாளர்கள் வந்தால் தான் சந்தை பரிணமிக்கும். அதே சமயம் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இனி சிறிது திரும்பிப் பார்ப்பர். அந்தப் பணம் உள்ளே வந்தால் பங்குச் சந்தை ஏறும். அதே சமயம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கூடும் வாய்ப்புள்ளது.

இப்படிக்கு,
திரு.சிவா (சென்னை)

Posted in | 0 comments

அணு சக்தியும் 'குதிரை சக்தி'யும்-அத்வானி...!!!!!


அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற அரசுக்கு 'குதிரை சக்தி' (குதிரை பேரம்) தேவைப்பட்டிருக்கிறது என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 7 பாஜக எம்.பிக்கள் கட்சி மாறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் பாஜக அதிர்ச்சி அடைந்தது.இதையடுத்து இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி இல்லத்தில் பாஜக தலைவர்கள் கூடி அவசர ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் மாற்றி வாக்களித்த எம்.பிக்களை கட்சியிலிருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டது.8 எம்.பிக்கள் நீக்கம்:எம்.பிக்கள் பிரிஜ்பூஷன் சரண் சிங்,சோமாபாய் படேல், மனோரமா மாதவராஜ், சங்கிலியானா, மஞ்சுநாத் குன்னூர், பாபுபாய் கட்டாரா, ஹரிபாய் தாக்கூர், ஸ்ரீகண்டப்பா ஆகியோர் ஆகியோர் மாற்றி ஓட்டுப் போட்டவர்கள் ஆவர்.கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை அத்வானி, ராஜ்நாத் சிங் ஆகியோர் சந்தித்தனர். அப்போது ராஜ்நாத் சிங் கூறுகையில், கட்சியின் உத்தரவை மீறி வாக்களித்த 8 எம்.பிக்களும் நீக்கப்படுவர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.கறை படிந்த வெற்றிபின்னர் அத்வானி பேசத் தொடங்கினார். அவர் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சில கட்சி தாவி எம்.பிக்களால்தான் வெற்றி பெற முடிந்திருக்கிறது. இது ஒரு கறை படிந்த வெற்றியாகும்.அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற குதிரை சக்தி (குதிரை பேரம்) அரசுக்கு தேவைப்பட்டிருக்கிறது.குதிரை பேரத்தால்தான் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெருமளவில் பணம் கொடுத்தும் கூட அதை ஏற்க மறுத்து அவர்களை நாடாளுமன்றத்திலேயே அம்பலப்படுத்திய 3 பாஜக எம்.பிக்களை நான் பாராட்டுகிறேன்.இந்த விவகாரம் குறித்து லோக்சபா சபாநாயகர் விரிவான விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர வேண்டும்.1989ம் ஆண்டு தேர்தலை பெருமளவில் கலக்கிய போபர்ஸ் பேர ஊழலைப் போல இந்த குதிரை பேர ஊழல் எனக்குத் தோன்றுகிறது.உலக அரங்கில் மிகவும் பழமைவாய்ந்த, சிறந்த ஜனநாயக நாடாக இந்தியா பார்க்கப்பட்டு வருகிறது. அந்தப் பெயருக்கு இந்த லஞ்ச விவகாரம் பெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டது.பண வீக்கம் மிக மோசமாக உள்ளது. நக்சலைட் தொல்லை நாடு பூராவும் பரவி வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்துள்ளது.இவை அனைத்தும் தேர்தல் பிரச்சினையாக இருக்கும். பாஜக இவற்றை தேர்தல் பிரசாரத்தின்போது முன்வைக்கும் என்றார் அத்வானி.
நன்றி: தட்ஸ் தமிழ்

திரு.ரவிக்குமார் (சென்னை)

Posted in | 0 comments

நெல்சன் மண்டேலாவுக்கு மகாத்மா காந்தி விருது...!!!!


அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது தென் ஆப்ரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.தென்னாப்பிரிக்கா டர்பனில் உள்ளது மகாத்மா காந்தி அறக்கட்டளை மற்றும் சத்யாகிரக அமைப்பு. கடந்த 2003ம் ஆண்டில் இருந்து இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதை நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கியுள்ளது. தியாகத்தாலும் பங்களிப்பாலும் உலக மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்று பாராட்டப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டார்.நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் மண்டேலா கலந்து கொள்ளவில்லை. விருதை அவருக்கு பதிலாக அவரது சிறைத் தோழரும் அரசியல் ஆலோசகருமான அகமது கத்ராடா பெற்றுக் கொண்டார்.விருதை மற்றொரு சிறைத் தோழர் பில்லி நாயர் வழங்கினார். இவர் 20 ஆண்டு சிறைவாசம் பெற்றவர். கடந்த வெள்ளிக்கிழமைதான் மண்டேலா தனது 90வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து அகமது கத்ராடா கூறுகையில், மண்டேலா சார்பாக மகாத்மா விருதை பெறுவதை பெருமையாக நினைக்கிறேன். மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டவன் நான்.மக்கள் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மண்டேலா ஒன்றும் ஞானியல்ல. சராசரி மனிதன்தான். அவருக்கும் பலவீனங்கள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

Posted in | 0 comments

யுவராஜுக்கு முன்னால் கேப்டன் கபில்தேவ் அறிவுரை

http://www.4to40.com/images/legends/kapildev/kapil_dev.gifhttp://www.epatrakar.com/wp-content/uploads/2008/05/yuvraj.jpg
இரவு நேர விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டு, கிரிக்கெட்டில் மட்டும் யுவராஜ் கவனம் செலுத்த வேண்டுமென கபில்தேவ் ஆவேசமாக கூறியுள்ளார்.பாகிஸ்தானில் நடந்த ஆசிய கோப்பை பைனலில் இந்திய அணி, இலங்கையிடம் தோல்வி அடைந்து கோப்பையை கோட்டை விட்டது. பைனலுக்கு முந்தைய நாள் இரவு கராச்சியில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் யுவராஜ், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
பார்ட்டி முடிந்து அதிகாலையில் ஓட்டலுக்கு திரும்பிய இவர்கள், போதிய ஓய்வு இல்லாமல் பைனலில் பங்கேற்றனர். இவர்களால் சோபிக்க முடியாமல் போக, விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. பின்னர் இலங்கை டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து யுவராஜ் நீக்கப்பட்டார். இவர் அடிக்கடி இரவு விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை முன்னாள் கேப்டன் கபில்தேவ் கண்டித்துள்ளார்.

இது குறித்து கபில் கூறியது:

யுவராஜ் திறமையான வீரர். இவர் இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டு, கிரிக்கெட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவரது தந்தை யோகராஜ் மிகச் சிறந்த டெஸ்ட் வீரராக விளங்கினார். தந்தையை போல கடினமாக முயற்சி செய்தால், யுவராஜ் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிப்பதை யாரும் தடுக்க முடியாது என்று கபில் தேவ் கூறினார்....


Posted in | 0 comments

யாரை திட்டுவது...!!!!!


குடை இல்லாததால்
மழையில் நனைந்து
கொண்டே செல்கிறாய்
நீ ...
குடை தராத உன்
அம்மாவை திட்டுவதா
இல்லை உன்னை
நனைக்கும் மழையை
திட்டுவதா என
நினைத்துக் கொண்டே
மழையில் நனைந்து வருகிறேன்
நான்
உனக்கு தர தைரியமில்லாத
என் குடையோடு..............
திரு . சசி

Posted in | 0 comments

கவிதை....!!!!!

ஆயிரம் கவிதைகள் என்னுள்...
எனக்கு
கவிதை எழுதத் தெரியாது
என்பதற்காக
உன் கவிதைகளைத் திருடி
உனக்கே பரிசளிக்கிறேன்....
"என்னை மடையானக்குவதில்,
உனக்கு ஏன் இத்தனை சந்தோஷம்?"
என்று கேட்கும் உன்னை,
விழியோடு விழி பார்த்து
நீ வேறு நான் வேறா
நாமிருவரும் ஒன்றல்லவா
என்று அழுத்தமாய்ச் சொல்லும் பொது
ஆயிரம் கவிதைகள்
என்னுள் தோன்றுதடி.....
திரு. சசி

Posted in | 0 comments

பாஜக பக்கம் சாய்கிறார் சரத்.....????

http://www.thehindu.com/2007/09/01/images/2007090154280401.jpg

காமராஜர் பிறந்த நாளை ஒட்டி திருப்பூரில் நடந்த முப்பெரும் விழாவில் சரத்குமாரின் பேச்சு, சில யுகங்களை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.

தி.மு.க., வுக்கு எதிராக தங்கள் கருத்தை வலுவாகவே, தொண்டர்களிடம் சரத்தும் ராதிகாவும் தெரிவித்தனர். அதேசமயம், "காங்கிரஸ் ஆட்சி செயலற்றுவிட்டது; விலைவாசி உயர்வைத் தடுக்கவில்லை, பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்கவில்லை; பணவீக்கம் அதிகரித்துள்ளது' என மத்திய அரசு மீது அடுக்கடுக் காக குற்றம்சாட்டினார். மேலும், "விலைவாசி உயர்வைத் தடுக்க எங்களிடம் மந்திரக் கோல் இல்லை என மத்திய அமைச்சர்கள் கூறுகின்றனர். அவர்கள் பதவியிறங்கட்டும்; எங்களிடம் மந்திரக் கோல் இருக்கிறது,' என்று சரத் காட்டமாகவே கருத்து தெரிவித்தார்.

காங்கிரசையும் தி.மு.க.,வையும் வெளிப்படையாக விமர்சித்த சரத், ராதிகா ஆகியோர், அ.தி.மு.க., பற்றி வாயே திறக்கவில்லை. இருவருமே, மறைமுகமாக விஜயகாந்தை தாக்கிப் பேசினர். தேசியக் கட்சியுடன் தான் கூட்டணி என்று கூறி விட்ட நிலையில், காங்.,- பா.ஜ., இரண்டில் காங்கிரசை மட்டுமே எதிர்த்து குரல் கொடுக்கிறார் சரத்குமார். எனவே, பா.ஜ.,வுடன் கூட்டணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக, ச.ம.க., வட்டாரத்தில் பேச்சு உலவுகிறது. லோக்சபா தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழ்நிலையில், பா.ஜ.,வுடன் பேச்சு துவங்கி விட்டதாகவும், ச.ம.க.,வினர் தெரிவிக்கின்றனர். இதற்காக, இரண்டு நாட்கள் முன்னால், டில்லியில் பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்கை சமத்துவ மக்கள் கட்சி அவைத் தலைவரான முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி முருகன், பூர்வாங்க பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

Posted in | 0 comments

வெளிநாட்டு வேலை : ஓர் அலசல்

http://travel.nationalgeographic.com/places/images/photos/photo_lg_malaysia.jpg

வெளிநாடு சென்றால் ஏதாவது ஒரு வேலை பார்த்து பிழைத்துக் கொள்ளலாம், கைநிறைய சம்பளம் கிடைக்கும், தனது குடும்பத்தாரை எந்த குறைவும் இல்லாமல் மகிழ்ச் சியாக பார்த்துக் கொள்ளலாம் என்ற கனவுகளோடு வெளிநாட்டில் வேலைக்கு செல்ல பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஏஜென்ட்களின் பேச்சை நம்பி ஒரு லட்சம், 2 லட்சம் என கொடுத்து வெளிநாடு செல்ல துடிக்கின்றனர்.

பெரும்பாலானவர்கள் இந்த பணத்தை கொடுக்க தாய் அல்லது மனைவியின் நகைகளை விற்றோ, வீட்டை அடமானம் வைத்தோ, வட்டிக்கு பணம் வாங்கியோ கொடுக்கின்றனர்.பாஸ்போர்ட், விசா பெறுவதற்கும் இந்த ஏஜென்ட்களையே அணுகுகின்றனர். சில சமயம் போலி பாஸ்போர்ட்டில் வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். இப்படி வெளிநாடு செல்பவர்கள் அங்குள்ள போலீசாரிடம் மாட்டிக் கொண்டு சிறையில் வாடுகின்றனர். குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா போனற நாடுகளுக்கும் சாதாரண வேலை தேடிச் செல்வோர் தான் இத்தகைய அவதிக்குள்ளாகின்றனர்.

அடிமைகளைப் போல வாழ்ந்து: முழுக்க முழுக்க ஏஜென்ட்களை நம்பி வெளிநாட்டிற்கு சென்ற பின்னரே அவர்கள் தாங்கள் கூலி வேலைக்காக அனுப்பப்பட்டுள் ளோம் என்பதை தெரிந்து கொள் கின்றனர். தெரிந்த பின்னரும் நாடு திரும்ப முடியாத அளவிற்கு பாஸ் போர்ட், விசா போன்ற ஆவணங் களை வேலை தரும் நிறுவனத்தார் வாங்கி வைத்து கொள்கின்றனர். ஒழுங்கான சம்பளம் தராத கம் பெனிகளில் 12 மணி நேரம் வேலை செய்யும் இவர்கள் அடிமைகளைப் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பலர் மன அழுத்தத்தில் தற் கொலை செய்து கொள்வதும் உண்டு. தப்பி செல்ல முயற்சி செய்து வேலை பார்க்கும் நிறுவனத் தாரால் அடித்து துன்புறுத்தப்படுவதும் உண்டு. அதையும் மீறி தங்கள் எதிர்ப்பை காட்டினால் உயிருக்கே ஆபத்தாக முடியும் அவல நிலையும் உள்ளது.

இந்தியாவிலேயே வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. என்ன வளம் இல்லை இங்கு. வெளிநாடுகளில் வேலை தேடுவதற்காக கஷ்டப்பட்டு திரட்டும் பணத்தை முதலீடு செய்து இந்தியாவிலேயே நம்பிக்கையுடன் சுயதொழில் செய்யலாம். பணத்திற் காக வேலை தேடி வெளிநாடு சென்று ஏமாந்து, வெறுங்கையோடு திரும்பினால் ஊர் சிரிக்குமே என மனம் நொந்து போவதை விட, உள் நாட்டிலேயே நமது பெற்றோர், சகோதரர் அல்லது நண்பர்களின் துணை உள்ளது என்ற நம்பிக்கையுடன் தொழில் செய்யலாம்; படிப் புக்கேற்ற வேலை பார்க்கலாம். வெளிநாட்டு வேலை என ஆசை காட்டுவோரிடம் குருட்டு நம் பிக்கை வைக்காமல், இங்கேயே என்ன செய்யலாம் என சிந்திக்க வேண்டும்.

போதிய விழிப்புணர்ச்சி: வெளிநாடுகளில் பாதிக்கப்படும் இந்தியர்கள் குறித்து பத்திரிகைகளிலும் "டிவி'களிலும் ஒரு சிலரது துயர சம்பவங்கள் மட்டுமே வெளிப்படுகின்றன. பலரது வாழ்க்கை வெளிநாட்டு வேலை மோகத்தால் சிதைந்து போனது வெளியுலகிற்கு தெரியாமலேயே போய்விடுகிறது. எனவே இது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.

நன்றி:தினமலர்.காம்

Posted in | 0 comments

ஓட்டுனர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்கள்-- போலீசார் அதிரடி

http://static.ibnlive.com/pix/sitepix/07_2008/chennai_kids_driving_248.jpg
சென்னையில் ஓட்டுனர் உரிமம் பெறாத பள்ளி மாணவர்கள் மீது மட்டும் அல்ல...அவர்களது பெற்றோர்கள் மீதும் போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது....
அதுவும் பல மாணவர்கள் 150சிசி வாகனங்களை பயன்படுத்துகின்றனர்....
கடந்த பத்து நாட்களில் 40 மாணவர்கள் பிடிபட்டு , வாகனம் யார் பெயரில் உள்ளதோ அவர்களுக்கு அபராதம் விதிக்க படுகிறது.....
மேலும் பள்ளி நிர்வாகத்தை பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு போலீசாரால் கேட்டு கொள்ளபட்டுள்ளது...

யாரை குற்றம் சொல்வது.....??

வாங்கி தரும் பெற்றோரையா...?
அடம் பிடிக்கும் மாணவர்களையா...??
வாகனங்களை அனுமதிக்கும் பள்ளிகளையா...??

நன்றி : ibnlive.com/news/chennais-new-worrying-trend-kids-on-bikes/69025-3.html

Posted in | 0 comments

இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் அடிதடி....

http://img.dinamalar.com/data/images_news/tblfpnnews_36937677861.jpg
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது. அரையிறுதியில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இப்போட்டியின் இடையே இரு அணி வீரர்களும் அடிதடியில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா, கொரியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடர் ஐதராபாத்தில் நடக்கிறது.

நேற்று நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய வீரர்கள் துவக்கத்திலிருந்தே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

16வது நிமிடத்தில் இந்திய வீரர் குர்விந்தர் சிங் முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். முதல் பாதி ஆட்டம் முடிய நான்கு நிமிடங்கள் இருந்தநிலையில், பாகிஸ்தான் தற்காப்பு பகுதிக்குள் நுழைந்த இந்திய வீரர் சுனிலுக்கும், பாகிஸ்தானின் காசிப்புக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இது ஒருகட்டத்தில் முற்றி அடிதடியாக மாறியது. நிலைமை கைமீறி போவதை உணர்ந்த நடுவர்கள் மற்றும் இரு அணியின் பயிற்சியாளர்கள், தலையிட்டு வீரர்களை சமாதானப்படுத்தினர். இதனால் ஆட்டம் 10 நிமிடம் தடைபட்டது.

காயமடைந்த இந்திய கேப்டன் குர்பஷ் சிங் மற்றும் பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இரண்டாவது பாதியில் சூப்பராக விளையாடிய திவாகர் ராம் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். 38வது மற்றும் 47வது நிமிடத்தில் தலா ஒரு கோலடித்து, அசத்தினார். பாகிஸ்தான் சார்பில் காசிப் அலி ஒரு கோலடித்தார். இறுதியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று, பைனலுக்குள் நுழைந்தது.

Posted in | 0 comments

நட்பு.....


மழலைப் பருவத்தில் பார்த்து வியக்க ஒரு நட்பு..
குழந்தைப் பருவத்தில் ஓடி விளையாட ஒரு நட்பு...
காளைப் பருவத்தில் ஊர் சுற்ற ஒரு நட்பு...
வாலிபப் பருவத்தில் பேசி ரசிக்க ஒரு நட்பு...
முதிர்ந்த பின் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு...
நட்புகள் ஆயிரம் இருந்தும் நட்பின் தேவை குறையவில்லை...
தேவையின் போது தோள்களில் சாய நட்பு வேண்டும்...
துன்பத்தின் போது கண்ணீர் துடைக்க நட்பு வேண்டும்...
மகிழ்ச்சியின் போது மனம் மகிழ நட்பு வேண்டும்...
நானாக நானிருக்க நட்பே...
நீ எனக்கு நட்பாக வேண்டும்..

Posted in | 0 comments

சந்தர்ப்பவாத அரசியல்....

http://images.encarta.msn.com/xrefmedia/sharemed/targets/images/pho/00169/00169d19.jpg
இந்தியாவில் இதெல்லாம் சகஜமப்பா.....என்று கூறும் அளவிற்கு சந்தர்ப்பவாத அரசியல் தெருவுக்கு தெரு சந்தி சிரிக்கின்றது....
அணுசக்தி உடன்பாடு விஸ்வரூபம் எடுத்து,டெல்லி அரசியல் கலை கட்ட துவங்கி உள்ளது....
குதிரை பேரம் , எதிர்பாராத கூட்டணி....என அரசியல் சித்து விளையாட்டு
சிறகடிக்கின்றது ....
காங்கிரஸ் -- சமாஜ்வாடி கூட்டணி இதற்க்கு சாட்சி..
நேற்று வரை எலியும் - பூனையும் என்று இருந்த இவர்கள் இன்று ...
நகமும் சதையுமாக மாறியுள்ளனர்......
விளைவு.....
தற்காலிக காங்கிரஸ் எதிரியாக மாறியுள்ள செல்வி மாயாவதி மீதுள்ள சி பி ஐ வழக்கு விரைவு படுத்தப்பட்டுள்ளது .
நண்பர்களாக இருந்த இடது சாரிகள்...இன்று எதிரிகளாக மாறிவிட்டனர்.....
மாயாவதியை சந்தித்து பிரகாஷ் காரத் நட்பு கரம் நீட்டி யுள்ளார் .....
நம்பிக்கை இல்லா தீர்மானத்தில்....ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் குதிரை
பேரத்தில் இறங்கியுள்ளது....
இதை பயன்படுத்தி பல பிராந்திய கட்சிகள்....தங்களது சுய தேவைகளை
முன் வைக்கின்றது....
எப்படியாவது ஆட்சியை கவிழ்க்க பிஜேபி மற்றும் அதன் கூட்டணிகள் கங்கணம் கட்டி கொண்டு களத்தில் குதித்துள்ளது.....
இப்படி நிலை இல்லாத அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்....
மக்களாகிய நாம் இதையெல்லாம் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்....
இல்லை மாற்றத்தை விரும்பினால்...
தேர்தலில் விடுமுறை என்று வீட்டில் தூங்காமல்....வாக்கு சாவடி சென்று
நல்லவனுக்கு வாக்கு அளியுங்கள்....

Posted in | 0 comments

போலீஸார் லஞ்சம் கேட்டு தொல்லை...!!! ஷேர் ஆட்டோக்கள் இன்று வேலை நிறுத்தம்...!!!


போலீஸார் லஞ்சம் கேட்டு தொல்லை செய்வதைக் கண்டித்து சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் ஷேர் ஆட்டோக்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டன.சென்னை நகர போக்குவரத்து சேவையில் ஷேர் ஆட்டோக்களின் பங்கும் கணிசமானது. வழக்கமான ஆட்டோக்களில் போவதைப் போல இல்லாமல், நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து செல்வதுதான் ஷேர் ஆட்டோ. ஆனால் பல ஷேர்ஆட்டோக்களில் பத்து பேர் வரை அடைத்துக் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.இப்படி அதிக அளவில் செல்வதால் பல சமயங்களில் விபத்துக்களும் ஏற்படுகின்றன.இந்தநிலையில் தங்களிடம் லஞ்சம்கேட்டு போலீஸார் தொல்லை செய்வதாகவும், பொய் வழக்கு போடுவதாக மிரட்டுவதாகவும் ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.போலீஸாரின் தொல்ைலக்கு முடிவு கட்டக்கோரி இன்று சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் ஷேர் ஆட்டோக்களை அதிகம் காண முடியவில்லை.
புதுச்சேரியில் உள்ளதைப் போல ஷேர் ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் உருவாக்க வேண்டும். கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். போலீஸாரின் தொல்லைக்கு முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் 21ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

Posted in Labels: , , | 0 comments

முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம்..!!!


முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என, பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற கலைஞர் தமிழ்ப் பேரவை தொடக்க விழா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கலைஞர் தமிழ்ப் பேரவையின் திருநெல்வேலி மாவட்டக் கிளை தொடக்க விழா கூட்டம் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் மு. ஜோதிமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில அமைப்பாளர் திருநாவுக்கரசு கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழுக்காக தொடர்ந்து பணி செய்து வரும் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். பேரவைக்கு உறுப்பினர்களாக மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் பேரை சேர்க்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக மாற்றவும், தமிழை மத்திய ஆட்சி மொழியாக்கவும் மத்திய அரசு வலியுறுத்தி தமிழர்களை ஒன்று திரட்ட வேண்டும்.
அண்ணாவின் பிறந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கவியரங்கம், கருத்தரங்கம், சிறப்புச் சொற்பொழிவு போன்றவற்றை நடத்த வேண்டும். துணை மேயர் கா. முத்துராமலிங்கம், மானூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஆ.க. மணி, வழக்கறிஞர் ரவீந்திரநாத், திருநெல்வேலி- தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழுத் தலைவர் கணேசன், பேரவையின் மாநிலச் செயலர் பி. சதீஷ், துணைச் செயலர் பி.எஸ். விஜயராகவன், மதுரை மாநகர் மாவட்ட அமைப்பாளர் மணி, மதுரை மாவட்டத் தலைவர் ராஜா உள்ளிட்டோர் பேசினர்.

Posted in | 0 comments

விஜய்யை இயக்குவது கஷ்டம் - எஸ்.ஏ.சி.


என் மகன் விஜய்யே நடிக்க முன் வந்தாலும் கூட இனி அவரை வைத்து என்னால் படம் இயக்க முடியாது. நான் அவரும் நல்ல நண்பர்களாக இருப்பதையே விரும்புகிறேன், என்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.இதுவரை 60-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தற்போது பந்தயம் எனும் படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இதில் நிதின் சத்யா, பிரகாஷ் ராஜ் மற்றும் சிந்து துலானி ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று அம்பிகா எம்பையர் ஓட்டலில் நடந்தது.ராம.நாராயணன் தலைமையில் நடந்த இவ்விழாவில் படத்தின் டிரெயிலரை விஜய் வெளியிட சிம்ரன் பெற்றுக் கொண்டார்.நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில், என் தந்தை இந்தக் கதையை என்னிடம்தான் முதலில் கூறினார். எனக்காகவே தயார் செய்து வைத்திருந்த மாதிரி இருந்தது இந்தக் கதை. ஆனால் அவர் என்னிடம் நடிக்கும்படி கேட்கவில்லை. கேட்டிருந்தாலும் 6 மாதங்களாவது காத்திருக்க வேண்டி வந்திருக்கும்.ஆனால் அவ்வளவு நாள் காத்திருக்கும் ரகமில்லை அப்பா. அதனால் நிதின் சத்யாவை வைத்து இயக்கிவிட்டார். இதோ ரிலீசுக்கும் ரெடியாகிக் கொண்டிருக்கிறது படம்.ஒரு விதத்தில் நான் இந்த வாய்ப்பை நிதினுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறேன் என்பதுதான் உண்மை. அவரது கண்கள் விசேஷமானவை. பல அற்புதமான உணர்வுகளைக் காட்டக் கூடியவை, என்றார்.

அடுத்துப் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியதாவது:

இந்தக் கதையை நான் என் மகன் விஜய்யிடம் கூறியது உண்மைதான். ஆனால் அவர் நடிக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. ஒரு நண்பன் என்ற முறையில் அவரது கருத்தை அறியவே சொன்னேன். மற்றபடி, அவரை என் படத்தில், இயக்கத்தில் நடி என்று நான் கேட்கமாட்டேன்.உண்மையைச் சொல்லணும்னா, விஜய்யை வைத்து இனிமேல் என்னால் படங்கள் இயக்க முடியாது. காரணம் இப்போது அவர் இருக்கும் உயரம் அப்படி. அவர் படத்துக்கு எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாகிவிட்டது.'என் அடுத்த படத்தில் நீ நடிச்சாகணும்பா' என்று நான் சொன்னால் விஜய் ஒன்றும் மறுத்து விடப் போவதில்லை. ஆனால் அது சரியாக வராது. படப்பிடிப்பில் நான் எப்போதும் கறாராகத்தான் இருப்பேன்.சரியான நேரத்துக்கு வராவிட்டால் கடும் கோபம் வரும் எனக்கு. அவர் லேட்டாக வந்தால் என்னால் கேட்க முடியாமல் போகும். அல்லது கேட்டால் எல்லாமே கெட்டுப் போகும். இதையெல்லாம் மனதில் வைத்துதான் அவரை நடிக்குமாறு கேட்பதில்லை நான்.ஆனாலும் அவரது அடுத்த படத்துக்கு நான் தயாரிப்பாளராக இருக்கிறேன். அதில் பிரச்சினை இருக்காது, என சந்திரசேகர் சொல்லிக் கொண்டே போக, விஜய் சிரிப்பை அடக்கியபடி, போதும்பா என சைகை செய்தார்.விஜய் படத்தை எஸ்ஏசி இயக்கமாலிருப்பதன் ரகசியம் இதுதானா...!

Posted in | 0 comments

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தால் இதுவரை ரூ. 16 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது..


ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் இதுவரை ரூ. 16 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.தென்னிந்தியாவின் மிகப் பெரிய மீன் உணவு மையங்களில் ராமேஸ்வரமும் ஒன்று. இங்கு கடந்த 8 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல்களைக் கண்டித்தும், தாக்குதலை மத்திய, மாநில அரசுகள் தடுக்கக் கோரியும் இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.மீனவர்கள் மட்டுமல்லாமல் மீன் பிடி தொழில் சம்பந்தப்பட்ட அனைவருமே போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால், மீன் பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று போராட்டத்தின் 9வது நாளாகும்.ராமேஸ்வரம் மீனவர்கள் தினசரி கடலுக்குச் சென்று வஞ்சிரம், இறால், வவ்வால், நண்டு உள்ளிட்ட 1000 டன் மீன்களைப் பிடித்து வருவது வழக்கம்.உள்ளூர் தேவைகளுக்குப் போக மற்ற மீன்கள், கொச்சி, தூத்துக்குடி, சென்னை துறைமுகங்களுக்கு அனுப்பப்பட்டு பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.பெரிய சைஸ் இறால், வஞ்சிரம், நண்டு உள்ளிட்டவைதான் பெருமளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.ஆனால் ஸ்டிரைக்கால் மீன் பிடி தொழில் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. இந்த ஸ்டிரைக்கால் 20 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள், ஏஜென்டுகள், படகு உரிமையாளர்கள், படகு பழுது பார்ப்போர், ஐஸ் தயாரிப்பு நிறுவனங்கள் என பல தரப்பட்டவரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.3000 மீனவர்கள் வேலையில்லாமல் வாடிக் கொண்டுள்ளனர். 850க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், நாகை மாவட்ட மீனவர்கள் இருவரை நேற்று இலங்கை கடற்படையினர் கொன்றுள்ளதால், நாகை மாவட்ட மீனவர்களும் போராட்டத்தில் குதிக்கும் வாய்ப்பு எழுந்துள்ளது. இதனால் மீனவர் போராட்டம் பெரிய அளவில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Posted in | 0 comments

தமிழ் திரை மாறுகிறது

http://www.behindwoods.com/tamil-movie-news-1/apr-08-04/images/subramaniapuram-21-04-08.jpg

சதையை நம்பிய காலங்கள் மாறி இன்று தமிழ் திரையுலகம்
கதையை நம்பும் காலம் வந்து விட்டது என்றே கூறலாம்...

http://nowrunning.com/cgi-bin/uploadedImagesNR/2182008103622PM.jpg
இன்றைய இயக்குனர்கள் வாய் வார்த்தைக்கு மட்டும்
"வித்தியாசம்" என்று கூறாமல்....
தம் கதையிலும் அதன் களத்திலும் "வித்தியாசம்"
காட்ட துவங்கிவிட்டனர்.....
http://image1.indiaglitz.com/tamil/reviews/kattradhu051007_1.jpg

ஓரிரு நல்ல படங்கள் என்ற நிலை கடந்து ..."பல நல்ல படங்கள் "
என்ற நிலை வந்து விட்டது....

அதற்கு சான்று :
சுப்ரமணியபுரம்
கற்றது தமிழ்
பருத்திவீரன்
வெயில்
மொழி
சேது
ராம்
பிதாமகன்
தசாவதாரம்...,

வளர்பிறை போன்று இந்த வளர்ச்சி இமயத்தை எட்ட வேண்டும்
என்று நம்புவோம்....
http://www.behindwoods.com/tamil-movie-articles/movies-05/images/veyil-3.jpg

லாபத்திற்க்காக மட்டும் அல்லாமல் தன் லட்சியதிர்க்காகவும் படம்
இயக்கம் இயக்குனர்கள் உள்ளவரை தமிழ் திரையின் இந்த
வளர்ச்சி தொடரும்.....

Posted in | 0 comments

மானக்ஷாவின் இறுதிச் சடங்கு : முக்கிய தலைவர்கள் வராதது ஏன்....??

http://www.assamtribune.com/jun2808/panel.jpg

பீல்டு மார்ஷல் மானக்ஷாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள் பங்கேற்காதது, வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுடனான போரில் இந்தியாவிற்கு வெற்றி தேடித் தந்த பீல்டு மார்ஷல் மானக்ஷா, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் காலமானார். அவரது இறுதிச் சடங்கு ஊட்டியில் நடந்தது. இதில் நாட்டின் முக்கிய தலைவர்கள் எவரும் பங்கேற்கவில்லை. ராணுவ அமைச்சர் அந்தோணி கூட பங்கேற்கவில்லை.


நியூசிலாந்தில் வசிக்கும் இந்தியர் : இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள் பங்கேற்காத தகவல் மீடியாக்கள் மூலமாக வெளிநாடுகளுக்கும் பரவியது.விஷயம் அறிந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பெரும்பாலானோர் கடும் அதிருப்தி அடைந்தனர். இணையதளம் மூலமாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். நியூசிலாந்தில் வசிக்கும் இந்தியர் ஒருவர், "பீல்டு மார்ஷல் மானக்ஷா, நியூசிலாந்தில் உள்ள வெலிங்டனில் இறக்கவில்லை. ஊட்டியில் உள்ள வெலிங்டனில் தான் இறந்தார்.

இந்திய தலைவர்கள் செல்ல முடியாத இடம் அல்ல இது. வெலிங்டனுக்கு அருகிலேயே கோவை விமான நிலையம் உள்ளது. ஈராக்கில் பாதுகாப்பு பணியில் உள்ள ஆஸ்திரேலிய வீரர் இறந்தால், அந்நாட்டின் முக்கிய தலைவர்கள் அந்த வீரரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கின்றனர். ஆனால், நாட்டிற்கு பெருமை தேடித் தந்த முன்னாள் ராணுவ தளபதி இறந்ததற்கு ராணுவ அமைச்சர் கூட கலந்து கொள்ளாதது வேதனை அளிக்கிறது' என தெரிவித்துள்ளார்.

நன்றி : தினமலர்.காம்

Posted in | 0 comments

மாணவர்களுக்கு மொட்டை...!!! ஆசிரியை கைது...!!!


தஞ்சாவூர்:
முடி வெட்டாமல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியை மொட்டை அடித்தார். இதையடுத்து அந்த ஆசிரியையை போலீஸார் கைது செய்தனர். தஞ்சை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் அறிவழகன் (12). உதாரமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆதிசிவலிங்கம். இவரது மகன் உதயகுமார் (12). இவர்கள் இருவரும் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
திங்கள் கிழமை அன்று வழக்கம் போல் இந்த மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். ஆனால் அந்த மாணவர்கள் நீளமாக முடி வைத்திருந்தார்கள் என்று கூறி பள்ளி ஆசிரியை ரெஜினா அந்த மாணவர்களுக்கு மொட்டை போட்டார்.
அப்போது மாணவர்களின் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு விட்டது. மொட்டை போட்ட தலையுடன் வீட்டுக்கு வந்த மாணவர்கள் நடந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து இரு மாணவர்களின் பெற்றோர்களும் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர்.
ஆனால் ஆசிரியை மீது பள்ளி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் உதயகுமார், அறிவழகன் ஆகியோரது பெற்றோர்கள் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆசிரியை ரெஜினாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், அந்த ஆசிரியை பள்ளியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Posted in | 0 comments

பணவீக்கம் விரைவில் 13 சதவீதத்தை எட்டும்...!!!


டெல்லி:

பணவீக்கம் 11.89 சதவீதமாக உயர்ந்துள்ளது. விரைவில் 13 சதவீதத்தை எட்டும் என நிதியமைச்ச தகவல்கள் தெரிவிக்கின்றன.

உணவு மற்றும் உற்பத்தி பொருட்களின் கடும் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத இந்த பண வீக்க உயர்வால் நிதியமைச்சகம் திக்கித் திணறி வருகிறது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் அது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் பண வீக்கம், முடிவடைந்த வாரத்தில் 11.89 சதவீதமாக உயர்ந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் இது 13 சதவீதமாக அதிகரிக்கும் என நிதியமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in | 0 comments

உணவு பொருட்கள் விலை உயர்ந்தது ஏன்? உலக வங்கி அறிக்கையில் புதிய தகவல்


நியூயார்க்: 'பயோ எரிபொருள் உற்பத்தி அதிகரிப்பே உலக அளவில் உணவுப் பொருட்கள் விலை 75 சதவீதம் உயர காரணம்' என, உலக வங்கி தெரிவித்துள்ளது. 'உணவுப் பொருட்கள் விலை பெருமளவு அதிகரிக்க பயோ எரிபொருள் உற்பத்தி காரணம் இல்லை. பயோ எரிபொருள் உற்பத்தியால் 3 சதவீத அளவுக்கு வேண்டுமானால், விலை அதிகரித்திருக்கலாம்' என, அமெரிக்கா தெரிவித்தது. அதிபர் புஷ்ஷோ, 'இந்தியா மற்றும் சீனாவில் உணவுப் பொருட்களின் தேவை அதிகரித்ததே, விலை உயர்வுக்கு காரணம்' என்றார். இந்நிலையில், உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது: உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க, பயோ எரிபொருள் உற்பத்தி அதிகரிப்பே காரணம். இதனால் தான், 75 சதவீத அளவுக்கு விலை கூடியுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களைக் கொண்டு நடத்தப் பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பால், உலக அளவில் 100 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர். வங்கதேசம் மற்றும் எகிப்து உட்பட சில நாடுகளில் வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. வளரும் நாடுகளில் உள்ளவர்களின் வருவாய் அதிகரித்ததால், உணவுப் பொருட்கள் நுகர்வு எதுவும் கூடவில்லை. ஐரோப்பிய யூனியன் நாடுகள் மற்றும் அமெரிக்காவில், பயோ எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததே, உணவுப் பொருள் குறைந்து, விலைவாசி உயர காரணம். பயோ எரிபொருளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டதால், உணவு சப்ளை பாதிக்கப் பட்டு விலைவாசி உயர்ந்து விட்டது. இவ்வாறு உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in | 0 comments

அரிய காணொளிகள் :

ஒகேனக்கல் பிரச்சனை : தமிழ் திரை உலக போராட்டம்

விஜயகாந்த் பேச்சு :



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆவேச உரை :



புரட்சி தமிழன் சத்யராஜ் பாய்ச்சல் :

பகுதி ஒன்று :



பகுதி இரண்டு :

Posted in | 0 comments

வில்லியம்ஸ் சகோதிரிகள் வெற்றி : சானியா ஜோடி தோல்வி



நடை பெற்று வரும் விம்பிள்டன் போட்டியில் சானியா - மட்டேக் ஜோடி
வில்லியம்ஸ் சகோதிரிகளிடம் 4-6, 3-6 என்ற நேர் செட்களில் தோல்வி
அடைந்தது .

மேலும் முன்னரே கலப்பு மற்றும் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இரண்டாவது
சுற்றில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது .

Posted in | 0 comments

கச்சா எண்ணெய் பற்றாக்குறையை சமாளிக்க மாற்று வழி.....!!


சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்துள்ளது. மக்கள் மற்றும் வாகனப் பெருக்கம் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் பயன்பாடு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.

எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை குறைத்து, கச்சா எண்ணெயின் விலையை ஏற்றியுள்ளன. உள்நாட்டு உற்பத்தி மிகவும் குறைவாக உள்ள நிலையில், எரிபொருட்களுக்காக வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இப்பிரச்னை அடுத்த 20 ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுக்கும். நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் 70 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இது 85 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் தினசரி 8.6 கோடி பேரல் என்ற அளவில் கச்சா எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

வாகனங்களின் எண்ணிக்கையும், கச்சா எண்ணெய் பயன்பாடு அதிகரிப்பையும் கணக்கில் கொண்டு பார்க்கும் போது, அடுத்த ஆண்டில் இது 8.9 கோடி பேரலாகவும், இரண்டு ஆண்டுகளில் 10.3 கோடி பேரலாகவும் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். சர்வதேச அளவில் செலவிடப்படும் கச்சா எண்ணெயில் 3.5 சதவீதம் இந்தியா பயன்படுத்துகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது 5 முதல் 6 சதவீதம் என்று அதிகரிக்கும். கச்சா எண்ணெய் தேவையில் 1 சதவீதம் அதிகரித்தால், எண்ணெயின் விலை 20 சதவீதம் அதிகரிக்கிறது. இதனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தற்போது ஒரு பேரல் 143 அமெரிக்க டாலர் என்ற விலையில் உள்ள கச்சா எண்ணெய், 200 அமெரிக்க டாலர்கள் வரை அதிகரிக்கலாம் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், நாட்டின் எரிபொருள் தேவையை குறைக்க வேண்டியது அவசியமாகிறது. வாகன போக்குவரத்திற்கு அதிகமான அளவில் எரிபொருள் செலவிடப்படுகிறது. குறிப்பாக, சரக்கு போக்குவரத்திற்கு கூடுதல் எரிபொருள் செலவு செய்யப்படுகிறது. இந்நிலையில், மாற்று ஏற்பாடுகள் மூலம் நாட்டின் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை சீர் செய்தால் மட்டுமே, அடுத்த சில ஆண்டுகளில் ஏற்படப் போகும் கச்சா எண்ணெய் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். இதற்கு நாட்டில் உள்ள நதிகளை இணைப்பதும், அவற்றின் மூலம் நீர் வழிப் போக்குவரத்தை ஏற்படுத்துவதும் மட்டுமே ஒரே தீர்வாக அமையும்.

நாட்டின் வட பகுதியிலும், மத்தியிலும் ஜீவநதிகள் உள்ளன. மழை காலங்களில் இவற்றில் பெரும் வெள்ளம் ஏற்படுகிறது. இதனால், கிடைக்கும் நீர் வீணாக ஓடி கடலில் கலக்கிறது. இந்நிலையில், தேசிய அளவில் நதிகளை இணைப்பதன் மூலம், கடலில் வீணாகும் மழை நீரை சேமித்து, பாசனம் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும். மேலும், நதிகளை இணைக்கும் கால்வாய்கள் மூலம் நீர் வழிப் போக்குவரத்தை செயல்படுத்த முடியும். மிகவும் பிரம்மாண்டமாக தோற்றமளிக்கும் இத்திட்டம், தமிழகத்தை போல ஒவ்வொரு மாநிலமும் செயல்படுத்த துவங்கினால் முடிக்கக்கூடிய ஒன்று தான் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

"நேஷனல் வாட்டர் வேஸ்ட் பிராஜெக்ட்' என்ற பெயரில் பேராசிரியர் ஏ.சி.காமராஜ் தலைமையிலான ஒரு வல்லுனர் குழு இந்திய நதிகளை இணைப்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. இதில், நதிநீர் இணைப்பு என்பது மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை, 1. இமயமலைநீர்வழி, 2.மத்திய நீர்வழி, 3. தெற்கு நீர்வழி . வற்றாத ஜீவநதிகளான கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய நதிகளை கொண்ட இமயமலை நீர்வழி என்பது நான்காயிரத்து 500 கி.மீ., நீளம் கொண்டது. கங்கையின் தென்பகுதி மகாநதி, நர்மதா மற்றும் தபதி ஆகிய நதிகளை கொண்ட மத்திய நீர்வழி ஐந்தாயிரத்து 750 கி.மீ., மற்றும் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகிய நதிகள் கொண்ட தெற்கு நீர்வழி என்பது நான்காயிரத்து 650 கி.மீ., நீளம் கொண்டது.

பொதுவாக, முந்தைய நதிநீர் இணைப்பு என்ற திட்டத்திற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. தங்கள் மாநிலங்களில் ஓடும் நதிகளை பங்கு போடுவது என்பதற்கு அவை ஒத்துக் கொள்ளவில்லை. மேலும், இவ்வளவு பெரிய திட்டத்திற்கு நிதி ஒதுக்குவது என்பதும் ஒரு சவாலான பிரச்னையாகவே இருந்து வருகிறது. இதனால், நதிநீர் இணைப்பு என்பது மிக சிக்கலான ஒரு திட்டமாக இன்று வரை கருதப்படுகிறது. ஆனால், நாட்டின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாநிலங்களையும் இந்த விஷயத்தில் ஈடுபட வைப்பது மத்திய அரசின் முக்கிய கடமையாக மாறிவிட்டது.

நன்றி : தினமலர்

Posted in | 0 comments

வணக்கம் தமிழா ......!!

http://indian-cinema.sulekha.com/mstore/Indian-Cinema/albums/default/TPEM2.jpg

வெள்ளையனை விரட்டி அடித்த
நம் மக்கள்.....அவனது மொழியாம்
ஆங்கிலயேத்திர்க்கு
அடிமை பட்டு விட்டனர்..................!!!

நம் தமிழின் பெருமையை உணர்த்த
புறப்பட்ட "அடைமழையில்" ஒரு துளி
நமது " தமிழ் துளி "...............!!!

Posted in | 0 comments