அகமதாபாத்தில் இன்று மாலை அடுத்தடுத்து 13 இடங்களில் குண்டு வெடிப்பு...!!!!


பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பின் பயங்கரம் இன்னும் அகலாத நிலையில் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இன்று மாலை அடுத்தடுத்து 13 இடங்களில் குண்டுகள் வெடித்து நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதில் 4 பேர் பலியாகியிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
பெங்களூரில் நேற்று முன்தினம் 9 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இன்றும் அங்கு வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் குஜராத்தின் அகமதாபாத் நகரில் இன்று அடுத்தடுத்து 13 இடங்களில் குண்டுகள் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஜவஹர் செளக், சக்லா, சரங்பூர், அம்ரல்வாடி, கோவிந்த்வாடி-கிஷான்பூர், ஹத்கேஸ்வர், மணி நகர், பாபு நகர் உள்பட 13 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
சைக்கிள்கள்- டிபன் பாக்ஸ்களில்:
மாலை 6.45 மணியளவில் பாபு நகரில் முதல் குண்டு வெடித்தது.வெடிகுண்டுள் அனைத்தும் சைக்கிள்கள் மற்றும் டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்புகளில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 4 பேர் உயிரிழந்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் மணி நகர் முதல்வர் நரேந்திர மோடியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில் குண்டு வெடித்தது. அதேபோல பாபு நகரில், ரயில் நிலையத்திற்கு வெளியே குண்டு வெடித்தது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அகமதாபாத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளை போலீஸார் முற்றுகையிட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரைப் போலவே அகமதபாத்திலும் குறைந்த சக்தி கொண்ட குண்டுகளே வைக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிரதீபா பாட்டீல், மன்மோகன் சிங் கண்டனம்:
குஜராத் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்கள் அமைதி காக்க வேண்டும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மும்பை உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பும், பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாஜக மாநிலங்களில்:
நேற்று தொடர் குண்டுவெடிப்பு நடந்த கர்நாடகத்திலும், இன்று நடந்துள்ள குஜராத்திலும் பாஜக ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
(நன்றி -- தட்ஸ் தமிழ் )

இவண்,
திரு..ரவிக்குமார்(சென்னை )

Posted in |

0 comments: