தீபாவளிக்கான ரயில் முன்பதிவு நிலவரம் : அனைத்து ரயில்களும் "ஹவுஸ் புல்"
Posted On 7/28/08 at by citizenஅக்டோர் 27ம் தேதி தீபாவளி வருவதால் 24, 25ம் தேதிகளில் பாண்டியன், முத்துநகர், கன்னியகுமரி எக்ஸ்பிரஸ் உட்பட ஏழு எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி மற்றும் ஏ.சி., மூன்றாம் வகுப்பு டிக்கெட்கள் அனைத்தும் நேற்று ஒரே நாளில் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. ரயில் டிக்கெட் ஏஜென்டுகள் போலி பெயர்களில் முன்பதிவு செய்துவிட்டார்களோ என்று பயணிகள் சந்தேகப்படுகின்றனர். ரயில்களில் 90 நாட்கள் வரை முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் விசேஷ நாட்களுக்கான முன்பதிவு முன்கூட்டியே செய்யப்பட்டுவிடுகிறது.
அக்டோர் 27ல் திங்கள்கிழமையன்று தீபாவளி வருகிறது. 25ம் தேதி சனி, 26ம் தேதி ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் 24ம் தேதி வெள்ளிக் கிழமையும், 25ம் தேதி சனிக்கிழ�யும் பல ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வகுப்பு டிக்கெட் மற்றும் மூன்றாம் வகுப்பு ஏ.சி., டிக்கெட் முழுவதும் நேற்று ஒரே நாளில் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.
* சென்னை எழும்பூரிலிருந்து இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அக்டோபர் 23, 24, மற்றும் 25ம் தேதிகளில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வகுப்பு டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. 23ம் தேதி இருக்கை வசதிக்கு காத்திருப்போர் பட்டியலில் 60 பேரும், 24ம் தேதி 300 பேரும், 25ம் தேதி 80 பேரும் உள்ளனர். மூன்றாம் வகுப்பு ஏ.சி., வகுப்பில் அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதிகளில் அனைத்து டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. 24ம் தேதி காத்திருப்போர் பட்டியலில் 14 பேரும், 25ம் தேதி 14 பேரும் இருக்கை வசதிக்கு காத்திருக்கின்றனர்.
* கன்னியாகுமரி, முத்துநகர், நெல்லை, ராக்போர்ட், அனந்தபுரி, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதிகளில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி டிக்கெட்களும், மூன்றாம் வகுப்பு ஏ.சி., வகுப்பு டிக்கெட்களும் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இரண்டாம் வகுப்பு தூங்கும் வகுப்பு பெட்டியில் இருக்கை வசதிக்கு 80 பேரிலிருந்து 300 பேர் வரை காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதிகளில் குறைந்த இடங்களே உள்ளன. உயர் வகுப்பு டிக்கெட்களிலும் குறைந்த இடங்களே உள்ளன.
சென்னை சென்ட்ரலிலிருந்து கோவைக்கு இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் 24ம் தேதி இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி) டிக்கெட்கள், ஏ.சி., மூன்றாம் வகுப்பு டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. உயர் வகுப்பு டிக்கெட்களும் குறைந்தளவே உள்ளன.
நேற்று ஞாயிற்றுக் கிழமை. காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை தான் டிக்கெட் கவுன்டர்கள் இயங்கின. அதற்குள்ளாகவே அனைத்து முக்கிய ரயில்களின் டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதால், பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
ரயில் டிக்கெட் வாங்குவதற்கு அனுமதி பெற்ற டிராவல் ஏஜென்டுகள், போலி ஏஜென்டுகள் பண்டிகையைப் பயன்படுத்தி, டிக்கெட்களை கூடுதல் விலைக்கு விற்பதற்காக அதிகளவில் முன்பதிவு செய்திருக்கலோமோ என பயணிகள் சந்தேகப்படுகின்றனர். நேற்றைய டிக்கெட் முன்பதிவு குறித்து விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினால் விண்ணப்பங்கள் உண்மையானதா?
போலி பெயர்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதா? என தெரியவரும் என்றும் பயணிகள் கூறுகின்றனர்.

நன்றி : தினமலர்.காம்

eppavum nadakarthanan