கவிதை....!!!!!
Posted On 7/21/08 at by citizenஆயிரம் கவிதைகள் என்னுள்...
எனக்கு
கவிதை எழுதத் தெரியாது
என்பதற்காக
உன் கவிதைகளைத் திருடி
உனக்கே பரிசளிக்கிறேன்....
"என்னை மடையானக்குவதில்,
உனக்கு ஏன் இத்தனை சந்தோஷம்?"
என்று கேட்கும் உன்னை,
விழியோடு விழி பார்த்து
நீ வேறு நான் வேறா
நாமிருவரும் ஒன்றல்லவா
என்று அழுத்தமாய்ச் சொல்லும் பொது
ஆயிரம் கவிதைகள்
என்னுள் தோன்றுதடி.....
திரு. சசி