வெளிநாட்டு வேலை : ஓர் அலசல்
Posted On 7/19/08 at by citizenவெளிநாடு சென்றால் ஏதாவது ஒரு வேலை பார்த்து பிழைத்துக் கொள்ளலாம், கைநிறைய சம்பளம் கிடைக்கும், தனது குடும்பத்தாரை எந்த குறைவும் இல்லாமல் மகிழ்ச் சியாக பார்த்துக் கொள்ளலாம் என்ற கனவுகளோடு வெளிநாட்டில் வேலைக்கு செல்ல பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஏஜென்ட்களின் பேச்சை நம்பி ஒரு லட்சம், 2 லட்சம் என கொடுத்து வெளிநாடு செல்ல துடிக்கின்றனர்.
பெரும்பாலானவர்கள் இந்த பணத்தை கொடுக்க தாய் அல்லது மனைவியின் நகைகளை விற்றோ, வீட்டை அடமானம் வைத்தோ, வட்டிக்கு பணம் வாங்கியோ கொடுக்கின்றனர்.பாஸ்போர்ட், விசா பெறுவதற்கும் இந்த ஏஜென்ட்களையே அணுகுகின்றனர். சில சமயம் போலி பாஸ்போர்ட்டில் வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். இப்படி வெளிநாடு செல்பவர்கள் அங்குள்ள போலீசாரிடம் மாட்டிக் கொண்டு சிறையில் வாடுகின்றனர். குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா போனற நாடுகளுக்கும் சாதாரண வேலை தேடிச் செல்வோர் தான் இத்தகைய அவதிக்குள்ளாகின்றனர்.
அடிமைகளைப் போல வாழ்ந்து: முழுக்க முழுக்க ஏஜென்ட்களை நம்பி வெளிநாட்டிற்கு சென்ற பின்னரே அவர்கள் தாங்கள் கூலி வேலைக்காக அனுப்பப்பட்டுள் ளோம் என்பதை தெரிந்து கொள் கின்றனர். தெரிந்த பின்னரும் நாடு திரும்ப முடியாத அளவிற்கு பாஸ் போர்ட், விசா போன்ற ஆவணங் களை வேலை தரும் நிறுவனத்தார் வாங்கி வைத்து கொள்கின்றனர். ஒழுங்கான சம்பளம் தராத கம் பெனிகளில் 12 மணி நேரம் வேலை செய்யும் இவர்கள் அடிமைகளைப் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பலர் மன அழுத்தத்தில் தற் கொலை செய்து கொள்வதும் உண்டு. தப்பி செல்ல முயற்சி செய்து வேலை பார்க்கும் நிறுவனத் தாரால் அடித்து துன்புறுத்தப்படுவதும் உண்டு. அதையும் மீறி தங்கள் எதிர்ப்பை காட்டினால் உயிருக்கே ஆபத்தாக முடியும் அவல நிலையும் உள்ளது.இந்தியாவிலேயே வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. என்ன வளம் இல்லை இங்கு. வெளிநாடுகளில் வேலை தேடுவதற்காக கஷ்டப்பட்டு திரட்டும் பணத்தை முதலீடு செய்து இந்தியாவிலேயே நம்பிக்கையுடன் சுயதொழில் செய்யலாம். பணத்திற் காக வேலை தேடி வெளிநாடு சென்று ஏமாந்து, வெறுங்கையோடு திரும்பினால் ஊர் சிரிக்குமே என மனம் நொந்து போவதை விட, உள் நாட்டிலேயே நமது பெற்றோர், சகோதரர் அல்லது நண்பர்களின் துணை உள்ளது என்ற நம்பிக்கையுடன் தொழில் செய்யலாம்; படிப் புக்கேற்ற வேலை பார்க்கலாம். வெளிநாட்டு வேலை என ஆசை காட்டுவோரிடம் குருட்டு நம் பிக்கை வைக்காமல், இங்கேயே என்ன செய்யலாம் என சிந்திக்க வேண்டும்.
போதிய விழிப்புணர்ச்சி: வெளிநாடுகளில் பாதிக்கப்படும் இந்தியர்கள் குறித்து பத்திரிகைகளிலும் "டிவி'களிலும் ஒரு சிலரது துயர சம்பவங்கள் மட்டுமே வெளிப்படுகின்றன. பலரது வாழ்க்கை வெளிநாட்டு வேலை மோகத்தால் சிதைந்து போனது வெளியுலகிற்கு தெரியாமலேயே போய்விடுகிறது. எனவே இது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.நன்றி:தினமலர்.காம்