மாணவர்களுக்கு மொட்டை...!!! ஆசிரியை கைது...!!!


தஞ்சாவூர்:
முடி வெட்டாமல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியை மொட்டை அடித்தார். இதையடுத்து அந்த ஆசிரியையை போலீஸார் கைது செய்தனர். தஞ்சை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் அறிவழகன் (12). உதாரமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆதிசிவலிங்கம். இவரது மகன் உதயகுமார் (12). இவர்கள் இருவரும் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
திங்கள் கிழமை அன்று வழக்கம் போல் இந்த மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். ஆனால் அந்த மாணவர்கள் நீளமாக முடி வைத்திருந்தார்கள் என்று கூறி பள்ளி ஆசிரியை ரெஜினா அந்த மாணவர்களுக்கு மொட்டை போட்டார்.
அப்போது மாணவர்களின் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு விட்டது. மொட்டை போட்ட தலையுடன் வீட்டுக்கு வந்த மாணவர்கள் நடந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து இரு மாணவர்களின் பெற்றோர்களும் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர்.
ஆனால் ஆசிரியை மீது பள்ளி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் உதயகுமார், அறிவழகன் ஆகியோரது பெற்றோர்கள் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆசிரியை ரெஜினாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், அந்த ஆசிரியை பள்ளியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Posted in |

0 comments: