பார்வை இருந்தும் இருளில் தவிக்கும் மக்கள்: விஜயகாந்த்
Posted On 10/5/08 at by citizenஎந்திரன் விளம்பர படங்கள்...........!!
Posted On 9/7/08 at by citizenப்ரியாமணிக்கு தேசிய விருது.....!!
Posted On 9/2/08 at by citizen
சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணிக்கு
தமிழ்துளியின் உளமிகுந்த வாழ்த்துக்கள் .......!!!!
முஷாரபை கைகழுவுகிறார் அதிபர் புஷ.....!!
Posted On 8/22/08 at by citizenஅதிபர் பதவியில் இருந்து முஷாரப் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் யூசுப் ரசா கிலானியுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் புஷ், பாகிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் தனது நிர்வாகம் தொடர்ந்து அளிக்கும் என்று உறுதி கூறியுள்ளார். கிலானியுடன் பேசிய புஷ், பாகிஸ்தானின் புதிய அதிபர் தேர்தல் குறித்தும் பேசினார். அதே போல, அதிபர் அதிகாரத்தையும் பார்லிமென்ட் அதிகாரத்தையும், வகைப்படுத்துவது எப்போது என்பது குறித் தும் அவர் கேட்டார். "அதிபர் தேர்தல் குறித்து அனைத்து விஷயங்களையும், தேர்தல் தேதியையும் முடிவு செய்யும் முழு அதிகாரம் தேர்தல் கமிஷனுக்குத் தான் உண்டு. பார்லிமென்ட் மற்றும் அதிபர் அதிகாரங்களை சமப்படுத்தும் வகையில், மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று கிலானி தெரிவித்தார்."பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே வலுவான உறவு நீடிக்கிறது. பாகிஸ்தானின் ஜனநாயக அரசுக்கு அனைத்து உதவிகளும் தொடர்ந்து அளிக்கப்படும்' என்று புஷ் கூறினார். உரையாடலின் போது, ஒலிம்பிக் போட்டி துவக்கவிழாவின் போது, கிலானியுடன் நடந்த சந்திப்பு குறித்து நினைவு கூர்ந்த புஷ், முன்னாள் பிரதமர் பெனசிரின் குழந்தைகளை தனக்கு அறிமுகப்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தார். அப்போது, பெனசிரின் குழந்தைகளும், புஷ்சை சந்தித்து பேசியதால் பெரிதும் உற்சாகத்தில் இருப்பதாகவும், அவர்களைப் போலவே, பெனசிரின் கணவரும் மகிழ்ச்சியில் இருப் பதாகவும் கிலானி கூறினார்.
பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுவடைய தொடர்ந்து அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த கிலானி, இதற்காக அரசும், மக்களும் அமெரிக்காவுக்கு நன்றியுள்ளவர்களாக இருப் பதாகவும் கூறினார். பின்னர், பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து தனது இரங்கலை புஷ் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு எப். 16 ரக விமானங்களை வழங்கியதற்காகவும், பழைய எப் - 16 விமானங்களை மேம்படுத்த 465 கோடி ரூபாய் நிதி வழங்கியதற்கும் கிலானி நன்றி தெரிவித்தார்.அதே போல, முஷாரப்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட புஷ், பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்புவதற்கு அவர் எடுத்த முயற்சிக்கு நன்றி தெரிவித்தார். அதே போல, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், முஷாரப் அளித்த ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார். முடிவு அமெரிக்கா கையில்: இந்த டெலிபோன் பேச்சு, மாறிவரும் பாகிஸ் தான் சூழ்நிலையை புஷ் ஆதரிப்பதாகக் காட்டுகிறது. பாகிஸ்தானில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால், அது முதலில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் கண்டலீசா ரைசால் அனுமதிக்கப்பட வேண் டும் என்று கூறுகின்றனர். தற்போது பாக்., அதிபர் முஷாரப் பதவி விலக அமெரிக்கா, ராணுவம், சவுதி அரேபியா ஆகிய மூன்று சக்திகள் செயல் பட்டிருக்கின்றன. பாகிஸ்தான் நலனைவிட, முஷாரபின் நட்பு அல் லது நெருக்கம் தேவையில்லை என்று ராணுவத் தளபதி கியானி முடிவு செய்துவிட்டார்.
'ஒலிம்பிக்' போட்டியில் தங்கம் வென்ற கோவை வீரர் : ரூ.500 உதவித்தொகை கிடைக்காமல் 17 ஆண்டாக தவிப்பு??!!
Posted On 8/21/08 at by citizen
அமெரிக்காவில் 1991ம் ஆண்டு நடந்த "சிறப்பு ஒலிம்பிக் போட்டியில்' தங்கம் வென்ற மனவளர்ச்சி குன்றிய கோவை வீரர், அரசின் உதவித்தொகை ரூ.500 கிடைக்காமல் 17 ஆண்டுகளாக தவம் கிடக்கிறார். சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. உடல் ஆரோக்கியமுள்ள இந்திய விளையாட்டு வீரர்கள் பலர் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள நிலையில், 1991ல் அமெரிக்காவில் நடந்த "இன்டர்நேஷனல் சம்மர் ஸ்பெஷல் ஒலிம்பிக்' போட்டியில், தங்கத்தை தட்டி வந்தார் கோவையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி.
தற்போது, ஒலிம்பிக் போட்டியில் தங்கமோ, வெள்ளியோ பெற்றால் மத்திய, மாநில அரசுகளும், தொழிலதிபர்களும் கோடிகளை பரிசாகக் கொட்டுகின்றனர். ஆனால், கிருஷ்ணமூர்த்தி தங்கம் வென்றும், மத்திய அரசோ, மாநில அரசோ இதுவரை பரிசு மட்டுமல்ல; எந்த உதவியும் செய்யவில்லை. அது மட்டுமின்றி, ஊனமுற்றோருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.500 கூட இவருக்கு மறுக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறையில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் விஜயராமன். கோவை மணியகராம்பாளையத்தில் மனைவி, மகன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் வசிக்கிறார். மேட்டுப்பாளையம் வித்யவிகாசினி பள்ளியில் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, நீளம் தாண்டுதல், ஓடுதல் ஆகியவற்றில் பயிற்சி பெற்றான். பள்ளிகளுக்கு இடையே(உடல் ஊனமுற்ற) நடந்த பல போட்டிகளில் வெற்றி பெற்றான்.
மாவட்ட, மாநில அளவில், தேசிய அளவில் நடந்த பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும், வெற்றி சான்றிதழ்களையும் குவித்தான். பின், பள்ளியின் மூலம் அமெரிக்காவில் உள்ள மின்னஸோடா மாநிலம் மினியா போல்ஸ் நகரில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றான். பெங்களூரு திரும்பியதும், அன்றைய கர்நாடக மாநில கவர்னர் குர்சித் மட்டும் ரூ. ஐந்தாயிரம் பரிசு வழங்கினார். கிருஷ்ணமூர்த்திக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கப்பட்டது. மருத்துவச் சான்றிதழ் 55 சதவீதம் மட்டுமே ஊனம் என தெரிவித்ததால், இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. 60 சதவீத ஊனச் சான்றிதழ் கிடைத்திருந்தால் உதவித்தொகை கிடைத்திருக்கும். பலமுறை முயன்றும் உதவித்தொகை பெற முடியவில்லை
சென்னை விமான நிலைய வளாகத்தில் வெடிகுண்டு பீதி.....!!
Posted On 8/12/08 at by citizenபார்வையாளர்கள் விமான நிலையத்திற்கு உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அசம்பாவிதங்கள் நேராமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், விமான நிலையத்தின் ஒரு பகுதியில் கிடந்த ஒரு வாட்டர் பில்டர், வெடிகுண்டு பீதியை நேற்று ஏற்படுத்தியது.
பன்னாட்டு முனையத்தின் ஒரு பகுதியில், தற்போது கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இங்கு, நேற்று காலை 10 மணிக்கு கேட்பாரற்ற நிலையில், பல மணி நேரமாக ஒரு பேப்பர் பை கிடந்தது. நீண்ட நேரமாக கிடந்த அந்தப் பையை அருகில் சென்று பார்த்த போது, அதில் ஒயர்கள் சுற்றிய நிலையில் சில பொருட்கள் இருப்பது தெரிந்தது. அது வெடிகுண்டாக இருக்குமோ என்று பீதி கிளம்பியது. தகவல் அறிந்த வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் குறிப்பிட்ட பையை பாதுகாப்பாக கைப்பற்றி, சோதனையிட்டனர். அதில், பைக்குள் வாட்டர் பில்டரும், அதற்கான பாகங்களும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதுவரை அங்கு நிலவிவந்த வெடிகுண்டு பீதி முடிவுக்கு வந்தது.
தங்கம் விலையில் கடும் வீழ்ச்சி.........!!!
Posted On at by citizenசர்வதேச அளவில் நேற்று காலை ஒரு அவுன்ஸ் தங்கம் 825.90 டாலராக இருந்தது. வர்த்தக முடிவில் இது 801.90 டாலராகக் குறைந்தது. மற்றொரு பக்கம் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 113 டாலர் வரை நேற்று வந்ததன் காரணமாக, பலரும் தங்கத்தில் செய்திருந்த முதலீட்டை விட்டு, எண்ணெய் பக்கம் சாய்ந்தனர். மும்பையில் சுத்த தங்கம் (24 காரட்) கிராம் ஆயிரத்து 100லிருந்து 945 வரை சரிந்தது. ஆபரணத் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ஆயிரத்து 96ஆக இருந்தது. நேற்று ஆயிரத்து 33 ஆக குறைந்தது. இதனால், ஒரு சவரனுக்கு 504 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் தங்கம் 8 ஆயிரத்து 264 ஆக இருந்தது. இது கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு விலை குறைந்தது. ஆடி மாதம் முடிந்து அடுத்து ஆவணி பிறக்க இருப்பதால், விலை குறைவைப் பயன்படுத்தி தங்க நகைகளை வாங்க பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக ஆடித் தள்ளுபடியில் துணிகள் வாங்குவதற்குப் பதில் நகைகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டத்தை நகைக் கடைகளில் அதிகம் பார்க்க முடிகிறது.
இதய வலியால் அவதிப்பட்ட சிறுமிக்கு ஆபரேஷன் : தமிழக மருத்துவர்கள் சாதனை...!!
Posted On 8/11/08 at by citizenபண்ணாரி அடுத்த பசுவபாளையத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ்; கூலி தொழிலாளி. இவரது மகள் புவனேஸ்வரி(13); அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறாள். குழந்தைப் பருவத்தில் இருந்தே, அடிக்கடி சளி, இருமல் பாதிப்பு புவனேஸ்வரிக்கு இருந்தது. கடந்த சில மாதங்களாக நெஞ்சு வலியாலும் அவதிப்பட்டாள். இதை தொடர்ந்து இவளது பெற்றோர், அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சென்ற போது பரிசோதித்த டாக்டர்கள், புவனேஸ்வரிக்கு காச நோய் தாக்கப்பட்டிருக்கலாம் என கூறி, அதற்கான சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
இதன் பேரில் தங்கராஜ், கடந்த மாதம் கோவை அரசு மருத்துவமனையில் புவனேஸ்வரியை சிகிச்சைக்காக அனுமதித்தார். அரசு மருத்துவமனையில் புவனேஸ்வரிக்கு செய்யப்பட்ட பரிசோதனையில், அவளுக்கு இடது புற நுரையீரல் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இத்துடன், சுத்த ரத்தக்குழாய் மற்றும் அசுத்த ரத்தக்குழாய்களில் இடையே உள்ள துவாரத்தின் வழியே இரு ரத்தமும் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இதய அறுவை சிகிச்சைப் பிரிவு பேராசிரியர் டாக்டர் ஜெயராமன் தலைமையில், டாக்டர்கள் வனிதா மணி, ராதிகா, சுகந்தி ஆகியோர் அடங்கிய குழு, புவனேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
இதய அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் டாக்டர் ஜெயராமன் கூறியதாவது: நோயாளியை பரிசோதனை செய்யும் போது, அவருக்கு பிறவியிலேயே ஒரு நுரையீரல் மட்டுமே இருப்பது தெரிந்தது. இடது புறம் இதயத்துக்கு மேல்புறம் இருக்க வேண்டிய நுரையீரல் இவருக்கு இல்லை. லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இது போன்று இருக்கும். ஒரு கிட்னியுடன் எப்படி வாழ முடியுமோ, அப்படியே ஒரு நுரையீரலுடனும் வாழலாம். இவ்வாறு பிறக்கும் 50 சதவீதம் குழந்தைகளுக்கு இதய கோளாறு இருக்கும்; இதய துவாரங்களுடன் இக்குழந்தைகள் இருப்பர்.
தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி புவனேஸ்வரிக்கு, இதய பிரச்னையுடன், இதயத்தில் இருந்து வெளியேறும் சுத்த ரத்த பெரிய தமனியும், அசுத்த ரத்த பெருஞ்சிரையும் கலந்தால் ஆபத்து என்பது தெரிந்தது. இதனால், புவனேஸ்வரிக்கு வயதுக்கு ஏற்ப உடல் வளர்ச்சியும், பெண்களுக்கு அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் இயற்கையான நிகழ்வுகளும் ஏற்படாமல் குழந்தையாகவே உள்ளார். இடது புறம் இதயம் இருப்பதால், நெஞ்சுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்வது கடினம்.
அதனால், முதுகு பகுதியை ஒட்டி இதயத்துக்கு எந்த பாதிப்பும் வராமல், இரு ரத்தக்குழாயையும் இணைத்திருந்த பாகத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினோம். கோவை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது; இனி, எவ்வித மருத்துவ சிகிச்சையும் தேவைப்படாது. உடலும் வயதுக்கேற்ற வளர்ச்சி அடையும். இவ்வாறு டாக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.
கூட்டணி குறித்து ஜெயலலிதா முக்கிய முடிவு.....??
Posted On 8/10/08 at by citizenஅ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தனது தலைமையில் "தேர்தலுக்கு முன்பு; தேர்தலுக்கு பின்பு' என்ற அடிப்படையில் கூட்டணி அமைக்க முடிவு செய்திருப்பதால், தமிழகத்தில் அணி மாற்றம் உறுதியாகியுள்ளது.
சமீபத்தில் பிரகாஷ் கராத் அளித்த பேட்டி ஒன்றில், "தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு பிற மாநிலங்களில் ஒரு நிலைப்பாடு என்பது கடந்த காலத்தில் மேற்கொண்டு இருக்கலாம். ஆனால், அதில் எங்களுக்கு இப்போது உடன்பாடில்லை. காங்கிரசுடனும் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைவதற்கு துணைபோகிற கட்சிகளுடனும் நாங்கள் தேர்தல் உறவு வைத்துக்கொள்ள மாட்டோம்' என தெரிவித்துள்ளார்.கடந்த 6, 7ம் தேதிகளில் புதுக்கோட்டையில் நடந்த மாநிலக் குழுக் கூட்டத்தில், இந்த விஷயம் தெளிவாக்கப்பட்டுள்ளது. "காங்கிரஸ், பா.ஜ., ஆகிய கட்சிகளுடன் மற்ற கட்சிகள் கொண்டுள்ள உறவைப் பொறுத்தே, அந்தக் கட்சிகளுடனான தனது நிலைப் பாட்டை தீர்மானிப்போம். மத்திய குழு எடுத்துள்ள இந்த முடிவின் திசையிலேயே தமிழக அரசியல் கட்சிகளுடனான உறவுகளும் அமையும் என்பதை தெளிவுபடுத்துகிறோம்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பா.ஜ., வுடன் உறவு வைத்துக் கொண்டால், சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெற முடியாது; இடதுசாரிகளுடன் கூட்டணி வைக்க முடியாது என்பதால் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி என்ற முடிவை ஜெயலலிதா எடுத்துள்ளார்.
ரஜினிகாந்த் பேச்சால் வசூல் குறைந்தது : தியேட்டர் உரிமையாளர்கள்
Posted On at by citizenபடம் ரிலீசாவதற்கு சில நாட்களுக்கு முன், "குசேலன் ' படம் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், "இப்படத்தில் எனது பங்கு 25 சதவீதம் தான். இது ரஜினிகாந்த் படம் அல்ல; பசுபதி படம்' என்று கூறியிருந்தார். இதனால், தியேட்டருக்கு ரசிகர்களின் வருகை குறைவாக இருப்பதாகவும், பட ரிலீசுக்கு முதல்நாள் கன்னடர்களை சமாதானம் செய்து ரஜினி அளித்த பேட்டியால், வசூல் பெருமளவு பாதித்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, தியேட்டர் உரிமையாளர்கள், மதுரையிலுள்ள பிரமிட் சாய்மீரா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
தியேட்டர் உரிமையாளர்கள் கூறியதாவது : படத்தை திரையிட நாங்கள் பணம் கட்டிய பிறகு ரஜினி பேட்டி அளித்தார். இதனால், போட்ட காசை எடுக்க முடியவில்லை. வங்கிகள் மற்றும் தனியார் பைனான்சியர்களிடம் 75 சதவீதம் கடன் வாங்கி இப்படத்தை திரையிட்டுள்ளோம். இதுவரை வட்டியுடன் சேர்த்து 90 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எங்களது நிலைமை கருதி "மினிமம் கியாரண்டியை' டெபாசிட் தொகையாக மாற்றி, வருவாயில் எங்களுக்குண்டான சதவீதத்தை கணக்கிட்டு தரவேண்டும். இல்லாவிட்டால், 12ம் தேதி, சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் முன், உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம். ரஜினி இவ்விஷயத்தில் தலையிட்டு பகிரங்க அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு தியேட்டர் உரிமையாளர்கள் கூறினர்.
செவ்வாயில் தண்ணீர்.....!!
Posted On 8/2/08 at by citizen
அமெரிக்காவின் நாசா அனுப்பிய பீனிக்ஸ் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது.இது பற்றி அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் வில்லியம் பாய்ன்டன், நாசா அறிக்கையில் கூறியதாவது:செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகளை முன்னரே ஒடிசி விண்கலம் கண்டுபிடித்தது. கடந்த மாதம், தண்ணீர் கட்டிகளை பீனிக்ஸ் கண்டுபிடித்தது.
ஆனால், செவ்வாய் கிரக தண்ணீரை உறுதி செய்வது இதுவே முதல் முறை.இவ்வாறு வில்லியம் பாய்ன்டன் கூறினார்.
காலத்தின் கோலம் :
Posted On 7/31/08 at by citizenகமல்ஹாசனின் மர்மயோகியில் வித்தியாசமான இசை ஒலிகளை அறிமுகப்படுத்தும் ரஹ்மான்....!!!!!!
Posted On 7/29/08 at by citizen

கமல்ஹாசனின் அடுத்த மெகா பட்ஜெட் படமான மர்மயோகியில் மிக வித்தியாசமான இசை ஒலிகளை அறிமுகப்படுத்தும் ஐடியாவில் உள்ளார் ரஹ்மான்.
இந்தப் படத்துக்காக, இதுவரை தமிழ் திரையில் ஒலித்திராத லத்தீன் அமெரிக்க பாணி இசைக் கருவிகளை மர்மயோகிக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளார் ரஹ்மான்.
சமீபத்தில் ஒரு இசைவிழாவுக்கு வந்திருந்த ரஹ்மானிடம் இதுபற்றிக் கேட்டபோது, நான் எல்லா படங்களுக்குமே பெஸ்ட் இசையைத் தரவே முயற்சிக்கிறேன். முயற்சிதான் என்னுடையது. மற்றபடி பாடல்களின் தலைவிதி ரசிகர்களின் மன நிலையைப் பொறுத்தே அமைகிறது. சில நேரங்களில் அதிகபட்ச விளம்பரங்கள் கூட ஒரு இசையை திரும்பத் திரும்ப கேட்க வைத்து விடும்.
ஆனால் உண்மையான இசை எப்போதும் நிலைத்திருக்கும். மர்மயோகி ஒன்லைன் மட்டும்தான் எனக்குத் தெரியும். வித்தியாசமான ஒரு முயற்சி. அதற்கு வித்தியாசமான இசையைத் தரவே முயற்சிக்கிறேன்.
இதில் சில புதிய ஒலிகளை அறிமுகப்படுத்த லத்தீன் அமெரிக்க இசைக் கருவிகளை உபயோகிக்கும் திட்டம் உள்ளது. இசைக்கு நல்ல ஸ்கோப் உள்ள கதை என்பதால் உங்கள் எதிர்பார்ப்புகளை பொய்யாக்காத அளவுக்கு பாடல்கள் இருக்கும் என்றார் அடக்கமாக.
சமீபத்தில் உங்களை நடிக்க வைக்கும் திட்டத்தில் இருப்பதாக பாரதிராஜா கூறினாரா... அப்படி ஏதாவது எண்ணமிருக்கிறதா?
(சிரிக்கிறார்) அவர் என்மீதுள்ள அன்பில் அப்படிச் சொல்லியிருப்பார். இசைக்கே நேரம் ஒதுக்க முடியவில்லை என்றார்.
சமீபத்தில் வெளியான இசை ஆல்பங்களில் குசேலனுக்கு அடுத்து அதிக சிடிக்கள் விற்று சாதனை படைத்துள்ளது ரஹ்மானின் சக்கரகட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியில் அவர் இசையைத்து வெளிவந்துள்ள ஜானே து ய ஜானே நா பெரும் சாதனை புரிந்து வருகிறது.
வ . ரவிக்குமார் ( சென்னை)
வெள்ளித்திரையில் தோன்றுகிறார் சச்சின் ....!!!!!
Posted On at by citizen
இதுவரை விளம்பரப் படங்களில் மட்டுமே நடித்து வந்த உங்கள் சச்சின் டெண்டுல்கர் முதல் முறையாக வெள்ளித் திரையிலும் தனது நடிப்பாற்றலைக் காட்ட வருகிறார்.
கடவுள் கணேசரின் திருவிளையாடல்களை விளக்கும் பாலிவுட் படம் ஒன்றில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் சினிமாவிலும் அவ்வப்போது தலை காட்டுவது சகஜமாகி வருவது. அந்த வகையில் சச்சின் டெண்டுல்கரும் நடிக்க வருகிறார்.
விக்னஹர்த்த ஸ்ரீ சித்திவிநாயக் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் கிரிக்கெட் வீரராகவே சச்சின் நடிக்கிறார். இதுகுறித்து இப்படத்தை தயாரிக்கும் ராஜீவ் சிங்வி கூறுகையில், சிறிய ரோலில் சச்சின் நடிக்கிறார். ஒரு பாடல் காட்சியிலோ அல்லது கிரிக்கெட் விளையாடுவது போன்றோ சச்சின் நடிப்பார்.
சச்சின் விநாயகரின் பக்தர். எனவே இந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கேட்டதும் அவர் ஒப்புக் கொண்டார். இலவசமாக நடித்துத் தரவும் ஒப்புக் கொண்டுள்ளார் என்றார் சிங்வி.
இப்படத்தை மும்பையில் உள்ள பிரபல சித்திவிநாயக் கோவில் அறக்கட்டளை தயாரிக்கிறது.
அறக்கட்டளை தலைவர் சுபாஷ் மேயகர் கூறுகையில், சித்திவிநாயக் கோவிலுக்கு பல வருடங்களாக சச்சின் வந்து செல்கிறார். தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு விநாயகர் பல வழிகளிலும் உறுதுணையாக இருப்பதால் இந்த படத்தில் நடிக்க அவர் மனமுவந்து ஒத்துக் கொண்டார் என்றார்.
தற்போது இலங்கை டெஸ்ட் பயணத்தில் இருக்கும் சச்சின் அதை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் ஷூட்டிங்குக்குப் போகிறாராம். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தில் அமிதாப் பச்சன் தனது குரலை கொடுக்கவுள்ளாராம்.
சச்சினை 'பெப்சி' கைவிட்டாலும் 'பிள்ளையார்' கைவிடவில்லை. சச்சின், நல்லா நடிங்க, அப்படியே ஆட்டத்தையும் பார்த்துக்குங்க!
நன்றி -- தட்ஸ் தமிழ்
வ . ரவிக்குமார்( சென்னை)
தீபாவளிக்கான ரயில் முன்பதிவு நிலவரம் : அனைத்து ரயில்களும் "ஹவுஸ் புல்"
Posted On 7/28/08 at by citizenஅக்டோர் 27ல் திங்கள்கிழமையன்று தீபாவளி வருகிறது. 25ம் தேதி சனி, 26ம் தேதி ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் 24ம் தேதி வெள்ளிக் கிழமையும், 25ம் தேதி சனிக்கிழ�யும் பல ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வகுப்பு டிக்கெட் மற்றும் மூன்றாம் வகுப்பு ஏ.சி., டிக்கெட் முழுவதும் நேற்று ஒரே நாளில் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.
* சென்னை எழும்பூரிலிருந்து இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அக்டோபர் 23, 24, மற்றும் 25ம் தேதிகளில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வகுப்பு டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. 23ம் தேதி இருக்கை வசதிக்கு காத்திருப்போர் பட்டியலில் 60 பேரும், 24ம் தேதி 300 பேரும், 25ம் தேதி 80 பேரும் உள்ளனர். மூன்றாம் வகுப்பு ஏ.சி., வகுப்பில் அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதிகளில் அனைத்து டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. 24ம் தேதி காத்திருப்போர் பட்டியலில் 14 பேரும், 25ம் தேதி 14 பேரும் இருக்கை வசதிக்கு காத்திருக்கின்றனர்.
* கன்னியாகுமரி, முத்துநகர், நெல்லை, ராக்போர்ட், அனந்தபுரி, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதிகளில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி டிக்கெட்களும், மூன்றாம் வகுப்பு ஏ.சி., வகுப்பு டிக்கெட்களும் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இரண்டாம் வகுப்பு தூங்கும் வகுப்பு பெட்டியில் இருக்கை வசதிக்கு 80 பேரிலிருந்து 300 பேர் வரை காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதிகளில் குறைந்த இடங்களே உள்ளன. உயர் வகுப்பு டிக்கெட்களிலும் குறைந்த இடங்களே உள்ளன.
சென்னை சென்ட்ரலிலிருந்து கோவைக்கு இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் 24ம் தேதி இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி) டிக்கெட்கள், ஏ.சி., மூன்றாம் வகுப்பு டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. உயர் வகுப்பு டிக்கெட்களும் குறைந்தளவே உள்ளன.
நேற்று ஞாயிற்றுக் கிழமை. காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை தான் டிக்கெட் கவுன்டர்கள் இயங்கின. அதற்குள்ளாகவே அனைத்து முக்கிய ரயில்களின் டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதால், பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
ரயில் டிக்கெட் வாங்குவதற்கு அனுமதி பெற்ற டிராவல் ஏஜென்டுகள், போலி ஏஜென்டுகள் பண்டிகையைப் பயன்படுத்தி, டிக்கெட்களை கூடுதல் விலைக்கு விற்பதற்காக அதிகளவில் முன்பதிவு செய்திருக்கலோமோ என பயணிகள் சந்தேகப்படுகின்றனர். நேற்றைய டிக்கெட் முன்பதிவு குறித்து விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினால் விண்ணப்பங்கள் உண்மையானதா?
போலி பெயர்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதா? என தெரியவரும் என்றும் பயணிகள் கூறுகின்றனர்.
ஆடி கிருத்திகை திருவிழா : திருத்தணியில் பக்தர்கள் குவிந்தனர்
Posted On 7/27/08 at by citizenபக்திப் பாடல்கள் பாடிக் கொண்டு மலைப்படிகள் வழியாக காவடி எடுத்து, தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். பெரும்பாலானோர் காவடி எடுத்து வந்து, மொட்டை அடித்து புனித நீராடினர். சிலர் பம்பை, உடுக்கை, சிலம்பு ஆட்டத்துடன் ஆடிக் கொண்டு மலைக்கோவிலுக்குச் சென்று, சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் சிலர் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்த, உடல் முழுவதும் அலகு குத்திக் கொண்டு முருகனை வழிபட்டனர்.மூலவர் முருகனுக்கு மரகதக்கல், தங்கக் கிரீடம், தங்க வேல் மற்றும் நகை அலங்காரம், புஷ்ப அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
பழநி, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் கொண்டு வந்த பல்வேறு வகையான மலர்களால், முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. திருப்பதி மலைக்கோவிலில் இருந்து சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன. இதே போல், காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட "கியூ' வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர்.
தெப்பத் திருவிழா: நேற்று தெப்பத் திருவிழாவில் மலைக்கோவிலில் இருந்து உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை குளத்திற்கு வருகை தந்தார். மாலை 6.30 மணிக்கு தெப்பத்தில் உற்சவர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். தொடர்ந்து அபிஷேக, அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. முருகன் தெப்பத்தை மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு பாலித்தார்.
அகமதாபாத்தில் இன்று மாலை அடுத்தடுத்து 13 இடங்களில் குண்டு வெடிப்பு...!!!!
Posted On 7/26/08 at by citizen
பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பின் பயங்கரம் இன்னும் அகலாத நிலையில் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இன்று மாலை அடுத்தடுத்து 13 இடங்களில் குண்டுகள் வெடித்து நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதில் 4 பேர் பலியாகியிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
பெங்களூரில் நேற்று முன்தினம் 9 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இன்றும் அங்கு வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் குஜராத்தின் அகமதாபாத் நகரில் இன்று அடுத்தடுத்து 13 இடங்களில் குண்டுகள் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஜவஹர் செளக், சக்லா, சரங்பூர், அம்ரல்வாடி, கோவிந்த்வாடி-கிஷான்பூர், ஹத்கேஸ்வர், மணி நகர், பாபு நகர் உள்பட 13 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
சைக்கிள்கள்- டிபன் பாக்ஸ்களில்:
மாலை 6.45 மணியளவில் பாபு நகரில் முதல் குண்டு வெடித்தது.வெடிகுண்டுள் அனைத்தும் சைக்கிள்கள் மற்றும் டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்புகளில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 4 பேர் உயிரிழந்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் மணி நகர் முதல்வர் நரேந்திர மோடியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில் குண்டு வெடித்தது. அதேபோல பாபு நகரில், ரயில் நிலையத்திற்கு வெளியே குண்டு வெடித்தது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அகமதாபாத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளை போலீஸார் முற்றுகையிட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரைப் போலவே அகமதபாத்திலும் குறைந்த சக்தி கொண்ட குண்டுகளே வைக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிரதீபா பாட்டீல், மன்மோகன் சிங் கண்டனம்:
குஜராத் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்கள் அமைதி காக்க வேண்டும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மும்பை உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பும், பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாஜக மாநிலங்களில்:
நேற்று தொடர் குண்டுவெடிப்பு நடந்த கர்நாடகத்திலும், இன்று நடந்துள்ள குஜராத்திலும் பாஜக ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
(நன்றி -- தட்ஸ் தமிழ் )
இவண்,
திரு.வ.ரவிக்குமார்(சென்னை )
வெக்கம்னா என்னன்னே தெரியாது....சுவாதி ...!!!!
Posted On at by citizen
வெக்கம்னா என்னன்னே தெரியாத என்னையும் நடிக்க வைச்சிட்டாங்க, என்கிறார் சுப்பிரமணியபுரம் நாயகி ஸ்வாதி.
விரிந்த விழிகள், வெட்கம் சிந்தும் பார்வை, கவிதைச் சிரிப்பு என சுப்பிரமணியபுரத்தில் இளசுகளின் மனசை அள்ளியவர் 'கலர்ஸ்' ஸ்வாதி. தெலுங்கு மா டிவியில் தொகுப்பாளரான இவர், செல்வராகவனின் சூப்பர் ஹிட் தெலுங்குப் படமான ஆடவாரி மாட்டலாகு அர்த்தலே வேறுலே படத்தில் த்ரிஷாவின் தங்கையாக வந்து கலக்கினார்.
அந்தப் படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தாலும், சுப்பிரமணியபுரம் வாய்ப்பு வந்ததும் அனைத்தையும் உதறிவிட்டு இந்த படத்திலேயே முழுமையாக கவனம் செலுத்தி வந்தார்.
அதற்கான பலன் இப்போது கைமேல் கிடைத்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் நன்கு நடிக்கத் தெரிந்த புதுமுகம் என்ற அங்கீகாரத்தை தனது முதல் படத்திலேயே பெற்றுவிட்டார் ஸ்வாதி. அடுத்த படத்தைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வரும்
ஸ்வாதியின் பேட்டி:
சுப்பிரமணியபுரம் படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்த்தீர்களா?
இந்தப் படத்தை மிகவும் சின்ஸியராக எடுத்தார்கள். அந்த முயற்சிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என நம்பினேன். ஆனால் அது இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என நினைக்கவில்லை. மனதுக்கு நிறைவாக இருக்கிறது.
படத்தில் சாதுப் பெண்ணாக இருந்தீர்களே... நிஜத்தில் எப்படி?
அய்யோ... நான் நிஜத்தில் படு சுட்டி. ரகளைப் பேர்வழி. என்னை அந்தப் படத்தில் பார்த்துவிட்டு, ஏய்.. நீதானா அது? என்னமா கலாட்டா பண்ணுவ, இப்படி அடக்க ஒடுக்கமா நல்ல பொண்ணா எப்படி மாறினே... என எல்லாரும் கிண்டலடித்தார்கள். அந்த அளவு கலாட்டா பார்ட்டி நான்.
இந்தப் படத்தில் வெட்கப்படும் காட்சிகள் நிறையவே இருந்தன. உண்மையைச் சொல்லணும்னா, வெக்கப்படறதுன்னா என்னன்னே எனக்குத் தெரியாது.
இன்னொன்னு படம் முழுக்க முழுக்க கிராமத்தில் நடப்பது போல கதை அமைப்பு வேறு. எனக்கு கிராமமும் தெரியாது, வெக்கமும் தெரியாது (இவரல்லவா மாடர்ன் மங்கை!). இருந்தும் இயக்குநரும், யூனிட் ஆட்களும் எனக்கு மிகப் பெரிய உதவியாய் இருந்தார்கள். வெக்கப்படறது எப்படின்னு இயக்குநர் சசிகுமார்தான் சொல்லிக் கொடுத்தார். அவருக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்.
அடுத்து என்ன படம்?
தெரியல... நான் எதையுமே திட்டம் போட்டுச் செய்யறதில்ல. நிறைய வாய்ப்புகள் வருது. பார்க்கலாம்... எத்தனை படம் என்பது முகியமில்லை. ஒண்ணு ரெண்டு செஞ்சாலும் பிடிச்சமாதிரி செய்யணுமே. அவ்வளவுதான், என்கிறார்.
நல்ல பாலிஸி!
இவண்
வ.ரவிக்குமார் (சென்னை )
மத்திய அரசு வெற்றி - பங்கு சந்தையில் என்ன நடக்கும்...??
Posted On 7/24/08 at by citizen
இன்சூரன்ஸ் சீர்திருத்தம், வங்கி சீர்திருத்தம் மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம். இது, இன்சூரன்ஸ், வங்கி ஆகிய துறைகளில் இன்னும் போட்டிகளையும், வெளிநாட்டு நிறுவனங்களையும் கொண்டு வரும். வெளிநாட்டு வங்கிகள், இந்திய வங்கிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டலாம். உலகளவில் இந்திய வங்கிகளின் மதிப்பை உயர்த்த, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு பற்றி மறுபடி பேசப்படலாம். பொறுமை காத்தவர்களுக்கும், சரிவில் வாங்கியவர்களுக்கும் பங்குச் சந்தை சிறிது லாபத்தை கடந்த ஐந்து நாட்களில் கொடுத்திருக்கும். வரும் நாட்களிலும் சந்தையில் சிறிது முன்னேற்றம் இருக்கலாம்.அதே சமயம் சந்தையில் கையை பெரிதாகச் சுட்டுக் கொண்டு அதிலிருந்து வெளிவரத் துடித்து கொண்டு இருப்பவர்கள் பலர். அவர்கள் எல்லா ஏற்றத்திலும் விற்று வெளியே வரவேண்டும் என்று நினைப்பதால் சந்தை அதையும் தாங்கி மேலே செல்ல வேண்டும். சந்தைக்கு சிறிய முதலீட்டாளர்கள் வந்தால் தான் சந்தை பரிணமிக்கும். அதே சமயம் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இனி சிறிது திரும்பிப் பார்ப்பர். அந்தப் பணம் உள்ளே வந்தால் பங்குச் சந்தை ஏறும். அதே சமயம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கூடும் வாய்ப்புள்ளது.
இப்படிக்கு,
திரு.சிவா (சென்னை)
அணு சக்தியும் 'குதிரை சக்தி'யும்-அத்வானி...!!!!!
Posted On 7/23/08 at by citizenநன்றி: தட்ஸ் தமிழ்
திரு.ரவிக்குமார் (சென்னை)
நெல்சன் மண்டேலாவுக்கு மகாத்மா காந்தி விருது...!!!!
Posted On at by citizenயுவராஜுக்கு முன்னால் கேப்டன் கபில்தேவ் அறிவுரை
Posted On 7/21/08 at by citizen
இரவு நேர விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டு, கிரிக்கெட்டில் மட்டும் யுவராஜ் கவனம் செலுத்த வேண்டுமென கபில்தேவ் ஆவேசமாக கூறியுள்ளார்.பாகிஸ்தானில் நடந்த ஆசிய கோப்பை பைனலில் இந்திய அணி, இலங்கையிடம் தோல்வி அடைந்து கோப்பையை கோட்டை விட்டது. பைனலுக்கு முந்தைய நாள் இரவு கராச்சியில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் யுவராஜ், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.பார்ட்டி முடிந்து அதிகாலையில் ஓட்டலுக்கு திரும்பிய இவர்கள், போதிய ஓய்வு இல்லாமல் பைனலில் பங்கேற்றனர். இவர்களால் சோபிக்க முடியாமல் போக, விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. பின்னர் இலங்கை டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து யுவராஜ் நீக்கப்பட்டார். இவர் அடிக்கடி இரவு விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை முன்னாள் கேப்டன் கபில்தேவ் கண்டித்துள்ளார்.
இது குறித்து கபில் கூறியது:
யுவராஜ் திறமையான வீரர். இவர் இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டு, கிரிக்கெட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவரது தந்தை யோகராஜ் மிகச் சிறந்த டெஸ்ட் வீரராக விளங்கினார். தந்தையை போல கடினமாக முயற்சி செய்தால், யுவராஜ் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிப்பதை யாரும் தடுக்க முடியாது என்று கபில் தேவ் கூறினார்....
யாரை திட்டுவது...!!!!!
Posted On at by citizen
குடை இல்லாததால்
மழையில் நனைந்து
கொண்டே செல்கிறாய்
நீ ...
குடை தராத உன்
அம்மாவை திட்டுவதா
இல்லை உன்னை
நனைக்கும் மழையை
திட்டுவதா என
நினைத்துக் கொண்டே
மழையில் நனைந்து வருகிறேன்
நான்
உனக்கு தர தைரியமில்லாத
என் குடையோடு..............
திரு . சசி
கவிதை....!!!!!
Posted On at by citizenஆயிரம் கவிதைகள் என்னுள்...
எனக்கு
கவிதை எழுதத் தெரியாது
என்பதற்காக
உன் கவிதைகளைத் திருடி
உனக்கே பரிசளிக்கிறேன்....
"என்னை மடையானக்குவதில்,
உனக்கு ஏன் இத்தனை சந்தோஷம்?"
என்று கேட்கும் உன்னை,
விழியோடு விழி பார்த்து
நீ வேறு நான் வேறா
நாமிருவரும் ஒன்றல்லவா
என்று அழுத்தமாய்ச் சொல்லும் பொது
ஆயிரம் கவிதைகள்
என்னுள் தோன்றுதடி.....
திரு. சசி
பாஜக பக்கம் சாய்கிறார் சரத்.....????
Posted On 7/19/08 at by citizenகாமராஜர் பிறந்த நாளை ஒட்டி திருப்பூரில் நடந்த முப்பெரும் விழாவில் சரத்குமாரின் பேச்சு, சில யுகங்களை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.
தி.மு.க., வுக்கு எதிராக தங்கள் கருத்தை வலுவாகவே, தொண்டர்களிடம் சரத்தும் ராதிகாவும் தெரிவித்தனர். அதேசமயம், "காங்கிரஸ் ஆட்சி செயலற்றுவிட்டது; விலைவாசி உயர்வைத் தடுக்கவில்லை, பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்கவில்லை; பணவீக்கம் அதிகரித்துள்ளது' என மத்திய அரசு மீது அடுக்கடுக் காக குற்றம்சாட்டினார். மேலும், "விலைவாசி உயர்வைத் தடுக்க எங்களிடம் மந்திரக் கோல் இல்லை என மத்திய அமைச்சர்கள் கூறுகின்றனர். அவர்கள் பதவியிறங்கட்டும்; எங்களிடம் மந்திரக் கோல் இருக்கிறது,' என்று சரத் காட்டமாகவே கருத்து தெரிவித்தார்.
காங்கிரசையும் தி.மு.க.,வையும் வெளிப்படையாக விமர்சித்த சரத், ராதிகா ஆகியோர், அ.தி.மு.க., பற்றி வாயே திறக்கவில்லை. இருவருமே, மறைமுகமாக விஜயகாந்தை தாக்கிப் பேசினர். தேசியக் கட்சியுடன் தான் கூட்டணி என்று கூறி விட்ட நிலையில், காங்.,- பா.ஜ., இரண்டில் காங்கிரசை மட்டுமே எதிர்த்து குரல் கொடுக்கிறார் சரத்குமார். எனவே, பா.ஜ.,வுடன் கூட்டணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக, ச.ம.க., வட்டாரத்தில் பேச்சு உலவுகிறது. லோக்சபா தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழ்நிலையில், பா.ஜ.,வுடன் பேச்சு துவங்கி விட்டதாகவும், ச.ம.க.,வினர் தெரிவிக்கின்றனர். இதற்காக, இரண்டு நாட்கள் முன்னால், டில்லியில் பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்கை சமத்துவ மக்கள் கட்சி அவைத் தலைவரான முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி முருகன், பூர்வாங்க பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
வெளிநாட்டு வேலை : ஓர் அலசல்
Posted On at by citizenவெளிநாடு சென்றால் ஏதாவது ஒரு வேலை பார்த்து பிழைத்துக் கொள்ளலாம், கைநிறைய சம்பளம் கிடைக்கும், தனது குடும்பத்தாரை எந்த குறைவும் இல்லாமல் மகிழ்ச் சியாக பார்த்துக் கொள்ளலாம் என்ற கனவுகளோடு வெளிநாட்டில் வேலைக்கு செல்ல பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஏஜென்ட்களின் பேச்சை நம்பி ஒரு லட்சம், 2 லட்சம் என கொடுத்து வெளிநாடு செல்ல துடிக்கின்றனர்.
பெரும்பாலானவர்கள் இந்த பணத்தை கொடுக்க தாய் அல்லது மனைவியின் நகைகளை விற்றோ, வீட்டை அடமானம் வைத்தோ, வட்டிக்கு பணம் வாங்கியோ கொடுக்கின்றனர்.பாஸ்போர்ட், விசா பெறுவதற்கும் இந்த ஏஜென்ட்களையே அணுகுகின்றனர். சில சமயம் போலி பாஸ்போர்ட்டில் வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். இப்படி வெளிநாடு செல்பவர்கள் அங்குள்ள போலீசாரிடம் மாட்டிக் கொண்டு சிறையில் வாடுகின்றனர். குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா போனற நாடுகளுக்கும் சாதாரண வேலை தேடிச் செல்வோர் தான் இத்தகைய அவதிக்குள்ளாகின்றனர்.
அடிமைகளைப் போல வாழ்ந்து: முழுக்க முழுக்க ஏஜென்ட்களை நம்பி வெளிநாட்டிற்கு சென்ற பின்னரே அவர்கள் தாங்கள் கூலி வேலைக்காக அனுப்பப்பட்டுள் ளோம் என்பதை தெரிந்து கொள் கின்றனர். தெரிந்த பின்னரும் நாடு திரும்ப முடியாத அளவிற்கு பாஸ் போர்ட், விசா போன்ற ஆவணங் களை வேலை தரும் நிறுவனத்தார் வாங்கி வைத்து கொள்கின்றனர். ஒழுங்கான சம்பளம் தராத கம் பெனிகளில் 12 மணி நேரம் வேலை செய்யும் இவர்கள் அடிமைகளைப் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பலர் மன அழுத்தத்தில் தற் கொலை செய்து கொள்வதும் உண்டு. தப்பி செல்ல முயற்சி செய்து வேலை பார்க்கும் நிறுவனத் தாரால் அடித்து துன்புறுத்தப்படுவதும் உண்டு. அதையும் மீறி தங்கள் எதிர்ப்பை காட்டினால் உயிருக்கே ஆபத்தாக முடியும் அவல நிலையும் உள்ளது.இந்தியாவிலேயே வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. என்ன வளம் இல்லை இங்கு. வெளிநாடுகளில் வேலை தேடுவதற்காக கஷ்டப்பட்டு திரட்டும் பணத்தை முதலீடு செய்து இந்தியாவிலேயே நம்பிக்கையுடன் சுயதொழில் செய்யலாம். பணத்திற் காக வேலை தேடி வெளிநாடு சென்று ஏமாந்து, வெறுங்கையோடு திரும்பினால் ஊர் சிரிக்குமே என மனம் நொந்து போவதை விட, உள் நாட்டிலேயே நமது பெற்றோர், சகோதரர் அல்லது நண்பர்களின் துணை உள்ளது என்ற நம்பிக்கையுடன் தொழில் செய்யலாம்; படிப் புக்கேற்ற வேலை பார்க்கலாம். வெளிநாட்டு வேலை என ஆசை காட்டுவோரிடம் குருட்டு நம் பிக்கை வைக்காமல், இங்கேயே என்ன செய்யலாம் என சிந்திக்க வேண்டும்.
போதிய விழிப்புணர்ச்சி: வெளிநாடுகளில் பாதிக்கப்படும் இந்தியர்கள் குறித்து பத்திரிகைகளிலும் "டிவி'களிலும் ஒரு சிலரது துயர சம்பவங்கள் மட்டுமே வெளிப்படுகின்றன. பலரது வாழ்க்கை வெளிநாட்டு வேலை மோகத்தால் சிதைந்து போனது வெளியுலகிற்கு தெரியாமலேயே போய்விடுகிறது. எனவே இது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.நன்றி:தினமலர்.காம்
ஓட்டுனர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்கள்-- போலீசார் அதிரடி
Posted On 7/17/08 at by citizen
சென்னையில் ஓட்டுனர் உரிமம் பெறாத பள்ளி மாணவர்கள் மீது மட்டும் அல்ல...அவர்களது பெற்றோர்கள் மீதும் போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது....
அதுவும் பல மாணவர்கள் 150சிசி வாகனங்களை பயன்படுத்துகின்றனர்....
கடந்த பத்து நாட்களில் 40 மாணவர்கள் பிடிபட்டு , வாகனம் யார் பெயரில் உள்ளதோ அவர்களுக்கு அபராதம் விதிக்க படுகிறது.....
மேலும் பள்ளி நிர்வாகத்தை பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு போலீசாரால் கேட்டு கொள்ளபட்டுள்ளது...
யாரை குற்றம் சொல்வது.....??
வாங்கி தரும் பெற்றோரையா...?
அடம் பிடிக்கும் மாணவர்களையா...??
வாகனங்களை அனுமதிக்கும் பள்ளிகளையா...??
நன்றி : ibnlive.com/news/chennais-new-worrying-trend-kids-on-bikes/69025-3.html
இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் அடிதடி....
Posted On at by citizen
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது. அரையிறுதியில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இப்போட்டியின் இடையே இரு அணி வீரர்களும் அடிதடியில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா, கொரியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடர் ஐதராபாத்தில் நடக்கிறது.
நேற்று நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய வீரர்கள் துவக்கத்திலிருந்தே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
16வது நிமிடத்தில் இந்திய வீரர் குர்விந்தர் சிங் முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். முதல் பாதி ஆட்டம் முடிய நான்கு நிமிடங்கள் இருந்தநிலையில், பாகிஸ்தான் தற்காப்பு பகுதிக்குள் நுழைந்த இந்திய வீரர் சுனிலுக்கும், பாகிஸ்தானின் காசிப்புக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இது ஒருகட்டத்தில் முற்றி அடிதடியாக மாறியது. நிலைமை கைமீறி போவதை உணர்ந்த நடுவர்கள் மற்றும் இரு அணியின் பயிற்சியாளர்கள், தலையிட்டு வீரர்களை சமாதானப்படுத்தினர். இதனால் ஆட்டம் 10 நிமிடம் தடைபட்டது.
காயமடைந்த இந்திய கேப்டன் குர்பஷ் சிங் மற்றும் பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இரண்டாவது பாதியில் சூப்பராக விளையாடிய திவாகர் ராம் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். 38வது மற்றும் 47வது நிமிடத்தில் தலா ஒரு கோலடித்து, அசத்தினார். பாகிஸ்தான் சார்பில் காசிப் அலி ஒரு கோலடித்தார். இறுதியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று, பைனலுக்குள் நுழைந்தது.
நட்பு.....
Posted On 7/14/08 at by citizenசந்தர்ப்பவாத அரசியல்....
Posted On at by citizen
இந்தியாவில் இதெல்லாம் சகஜமப்பா.....என்று கூறும் அளவிற்கு சந்தர்ப்பவாத அரசியல் தெருவுக்கு தெரு சந்தி சிரிக்கின்றது....
அணுசக்தி உடன்பாடு விஸ்வரூபம் எடுத்து,டெல்லி அரசியல் கலை கட்ட துவங்கி உள்ளது....
குதிரை பேரம் , எதிர்பாராத கூட்டணி....என அரசியல் சித்து விளையாட்டு
சிறகடிக்கின்றது ....
காங்கிரஸ் -- சமாஜ்வாடி கூட்டணி இதற்க்கு சாட்சி..
நேற்று வரை எலியும் - பூனையும் என்று இருந்த இவர்கள் இன்று ...
நகமும் சதையுமாக மாறியுள்ளனர்......
விளைவு.....
தற்காலிக காங்கிரஸ் எதிரியாக மாறியுள்ள செல்வி மாயாவதி மீதுள்ள சி பி ஐ வழக்கு விரைவு படுத்தப்பட்டுள்ளது .
நண்பர்களாக இருந்த இடது சாரிகள்...இன்று எதிரிகளாக மாறிவிட்டனர்.....
மாயாவதியை சந்தித்து பிரகாஷ் காரத் நட்பு கரம் நீட்டி யுள்ளார் .....
நம்பிக்கை இல்லா தீர்மானத்தில்....ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் குதிரை
பேரத்தில் இறங்கியுள்ளது....
இதை பயன்படுத்தி பல பிராந்திய கட்சிகள்....தங்களது சுய தேவைகளை
முன் வைக்கின்றது....
எப்படியாவது ஆட்சியை கவிழ்க்க பிஜேபி மற்றும் அதன் கூட்டணிகள் கங்கணம் கட்டி கொண்டு களத்தில் குதித்துள்ளது.....
இப்படி நிலை இல்லாத அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்....
மக்களாகிய நாம் இதையெல்லாம் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்....
இல்லை மாற்றத்தை விரும்பினால்...
தேர்தலில் விடுமுறை என்று வீட்டில் தூங்காமல்....வாக்கு சாவடி சென்று
நல்லவனுக்கு வாக்கு அளியுங்கள்....
போலீஸார் லஞ்சம் கேட்டு தொல்லை...!!! ஷேர் ஆட்டோக்கள் இன்று வேலை நிறுத்தம்...!!!
Posted On at by citizen
போலீஸார் லஞ்சம் கேட்டு தொல்லை செய்வதைக் கண்டித்து சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் ஷேர் ஆட்டோக்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டன.சென்னை நகர போக்குவரத்து சேவையில் ஷேர் ஆட்டோக்களின் பங்கும் கணிசமானது. வழக்கமான ஆட்டோக்களில் போவதைப் போல இல்லாமல், நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து செல்வதுதான் ஷேர் ஆட்டோ. ஆனால் பல ஷேர்ஆட்டோக்களில் பத்து பேர் வரை அடைத்துக் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.இப்படி அதிக அளவில் செல்வதால் பல சமயங்களில் விபத்துக்களும் ஏற்படுகின்றன.இந்தநிலையில் தங்களிடம் லஞ்சம்கேட்டு போலீஸார் தொல்லை செய்வதாகவும், பொய் வழக்கு போடுவதாக மிரட்டுவதாகவும் ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.போலீஸாரின் தொல்ைலக்கு முடிவு கட்டக்கோரி இன்று சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் ஷேர் ஆட்டோக்களை அதிகம் காண முடியவில்லை.
புதுச்சேரியில் உள்ளதைப் போல ஷேர் ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் உருவாக்க வேண்டும். கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். போலீஸாரின் தொல்லைக்கு முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் 21ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம்..!!!
Posted On at by citizen
முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என, பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற கலைஞர் தமிழ்ப் பேரவை தொடக்க விழா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கலைஞர் தமிழ்ப் பேரவையின் திருநெல்வேலி மாவட்டக் கிளை தொடக்க விழா கூட்டம் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் மு. ஜோதிமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில அமைப்பாளர் திருநாவுக்கரசு கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழுக்காக தொடர்ந்து பணி செய்து வரும் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். பேரவைக்கு உறுப்பினர்களாக மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் பேரை சேர்க்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக மாற்றவும், தமிழை மத்திய ஆட்சி மொழியாக்கவும் மத்திய அரசு வலியுறுத்தி தமிழர்களை ஒன்று திரட்ட வேண்டும்.
அண்ணாவின் பிறந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கவியரங்கம், கருத்தரங்கம், சிறப்புச் சொற்பொழிவு போன்றவற்றை நடத்த வேண்டும். துணை மேயர் கா. முத்துராமலிங்கம், மானூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஆ.க. மணி, வழக்கறிஞர் ரவீந்திரநாத், திருநெல்வேலி- தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழுத் தலைவர் கணேசன், பேரவையின் மாநிலச் செயலர் பி. சதீஷ், துணைச் செயலர் பி.எஸ். விஜயராகவன், மதுரை மாநகர் மாவட்ட அமைப்பாளர் மணி, மதுரை மாவட்டத் தலைவர் ராஜா உள்ளிட்டோர் பேசினர்.
விஜய்யை இயக்குவது கஷ்டம் - எஸ்.ஏ.சி.
Posted On 7/13/08 at by citizenராமேஸ்வரத்தில் மீனவர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தால் இதுவரை ரூ. 16 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது..
Posted On at by citizenதமிழ் திரை மாறுகிறது
Posted On 7/12/08 at by citizen
சதையை நம்பிய காலங்கள் மாறி இன்று தமிழ் திரையுலகம்
கதையை நம்பும் காலம் வந்து விட்டது என்றே கூறலாம்...
இன்றைய இயக்குனர்கள் வாய் வார்த்தைக்கு மட்டும்
"வித்தியாசம்" என்று கூறாமல்....
தம் கதையிலும் அதன் களத்திலும் "வித்தியாசம்"
காட்ட துவங்கிவிட்டனர்.....
ஓரிரு நல்ல படங்கள் என்ற நிலை கடந்து ..."பல நல்ல படங்கள் "
என்ற நிலை வந்து விட்டது....
அதற்கு சான்று :
சுப்ரமணியபுரம்
கற்றது தமிழ்
பருத்திவீரன்
வெயில்
மொழி
சேது
ராம்
பிதாமகன்
தசாவதாரம்...,
வளர்பிறை போன்று இந்த வளர்ச்சி இமயத்தை எட்ட வேண்டும்
என்று நம்புவோம்....
லாபத்திற்க்காக மட்டும் அல்லாமல் தன் லட்சியதிர்க்காகவும் படம்
இயக்கம் இயக்குனர்கள் உள்ளவரை தமிழ் திரையின் இந்த
வளர்ச்சி தொடரும்.....
மானக்ஷாவின் இறுதிச் சடங்கு : முக்கிய தலைவர்கள் வராதது ஏன்....??
Posted On 7/11/08 at by citizen
பீல்டு மார்ஷல் மானக்ஷாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள் பங்கேற்காதது, வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுடனான போரில் இந்தியாவிற்கு வெற்றி தேடித் தந்த பீல்டு மார்ஷல் மானக்ஷா, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் காலமானார். அவரது இறுதிச் சடங்கு ஊட்டியில் நடந்தது. இதில் நாட்டின் முக்கிய தலைவர்கள் எவரும் பங்கேற்கவில்லை. ராணுவ அமைச்சர் அந்தோணி கூட பங்கேற்கவில்லை.
நியூசிலாந்தில் வசிக்கும் இந்தியர் : இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள் பங்கேற்காத தகவல் மீடியாக்கள் மூலமாக வெளிநாடுகளுக்கும் பரவியது.விஷயம் அறிந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பெரும்பாலானோர் கடும் அதிருப்தி அடைந்தனர். இணையதளம் மூலமாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். நியூசிலாந்தில் வசிக்கும் இந்தியர் ஒருவர், "பீல்டு மார்ஷல் மானக்ஷா, நியூசிலாந்தில் உள்ள வெலிங்டனில் இறக்கவில்லை. ஊட்டியில் உள்ள வெலிங்டனில் தான் இறந்தார்.
இந்திய தலைவர்கள் செல்ல முடியாத இடம் அல்ல இது. வெலிங்டனுக்கு அருகிலேயே கோவை விமான நிலையம் உள்ளது. ஈராக்கில் பாதுகாப்பு பணியில் உள்ள ஆஸ்திரேலிய வீரர் இறந்தால், அந்நாட்டின் முக்கிய தலைவர்கள் அந்த வீரரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கின்றனர். ஆனால், நாட்டிற்கு பெருமை தேடித் தந்த முன்னாள் ராணுவ தளபதி இறந்ததற்கு ராணுவ அமைச்சர் கூட கலந்து கொள்ளாதது வேதனை அளிக்கிறது' என தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்.காம்மாணவர்களுக்கு மொட்டை...!!! ஆசிரியை கைது...!!!
Posted On at by citizen
தஞ்சாவூர்:
முடி வெட்டாமல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியை மொட்டை அடித்தார். இதையடுத்து அந்த ஆசிரியையை போலீஸார் கைது செய்தனர். தஞ்சை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் அறிவழகன் (12). உதாரமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆதிசிவலிங்கம். இவரது மகன் உதயகுமார் (12). இவர்கள் இருவரும் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
திங்கள் கிழமை அன்று வழக்கம் போல் இந்த மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். ஆனால் அந்த மாணவர்கள் நீளமாக முடி வைத்திருந்தார்கள் என்று கூறி பள்ளி ஆசிரியை ரெஜினா அந்த மாணவர்களுக்கு மொட்டை போட்டார்.
அப்போது மாணவர்களின் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு விட்டது. மொட்டை போட்ட தலையுடன் வீட்டுக்கு வந்த மாணவர்கள் நடந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து இரு மாணவர்களின் பெற்றோர்களும் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர்.
ஆனால் ஆசிரியை மீது பள்ளி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் உதயகுமார், அறிவழகன் ஆகியோரது பெற்றோர்கள் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆசிரியை ரெஜினாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், அந்த ஆசிரியை பள்ளியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பணவீக்கம் விரைவில் 13 சதவீதத்தை எட்டும்...!!!
Posted On at by citizenஉணவு மற்றும் உற்பத்தி பொருட்களின் கடும் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத இந்த பண வீக்க உயர்வால் நிதியமைச்சகம் திக்கித் திணறி வருகிறது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் அது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் பண வீக்கம், முடிவடைந்த வாரத்தில் 11.89 சதவீதமாக உயர்ந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் இது 13 சதவீதமாக அதிகரிக்கும் என நிதியமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உணவு பொருட்கள் விலை உயர்ந்தது ஏன்? உலக வங்கி அறிக்கையில் புதிய தகவல்
Posted On 7/7/08 at by citizenஅரிய காணொளிகள் :
Posted On 7/4/08 at by citizenஒகேனக்கல் பிரச்சனை : தமிழ் திரை உலக போராட்டம்
விஜயகாந்த் பேச்சு :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆவேச உரை :
புரட்சி தமிழன் சத்யராஜ் பாய்ச்சல் :
பகுதி ஒன்று :
பகுதி இரண்டு :
வில்லியம்ஸ் சகோதிரிகள் வெற்றி : சானியா ஜோடி தோல்வி
Posted On 7/2/08 at by citizen
நடை பெற்று வரும் விம்பிள்டன் போட்டியில் சானியா - மட்டேக் ஜோடி
வில்லியம்ஸ் சகோதிரிகளிடம் 4-6, 3-6 என்ற நேர் செட்களில் தோல்வி
அடைந்தது .
மேலும் முன்னரே கலப்பு மற்றும் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இரண்டாவது
சுற்றில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது .
கச்சா எண்ணெய் பற்றாக்குறையை சமாளிக்க மாற்று வழி.....!!
Posted On at by citizenசர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்துள்ளது. மக்கள் மற்றும் வாகனப் பெருக்கம் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் பயன்பாடு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.
எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை குறைத்து, கச்சா எண்ணெயின் விலையை ஏற்றியுள்ளன. உள்நாட்டு உற்பத்தி மிகவும் குறைவாக உள்ள நிலையில், எரிபொருட்களுக்காக வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இப்பிரச்னை அடுத்த 20 ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுக்கும். நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் 70 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இது 85 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் தினசரி 8.6 கோடி பேரல் என்ற அளவில் கச்சா எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
வாகனங்களின் எண்ணிக்கையும், கச்சா எண்ணெய் பயன்பாடு அதிகரிப்பையும் கணக்கில் கொண்டு பார்க்கும் போது, அடுத்த ஆண்டில் இது 8.9 கோடி பேரலாகவும், இரண்டு ஆண்டுகளில் 10.3 கோடி பேரலாகவும் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். சர்வதேச அளவில் செலவிடப்படும் கச்சா எண்ணெயில் 3.5 சதவீதம் இந்தியா பயன்படுத்துகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது 5 முதல் 6 சதவீதம் என்று அதிகரிக்கும். கச்சா எண்ணெய் தேவையில் 1 சதவீதம் அதிகரித்தால், எண்ணெயின் விலை 20 சதவீதம் அதிகரிக்கிறது. இதனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தற்போது ஒரு பேரல் 143 அமெரிக்க டாலர் என்ற விலையில் உள்ள கச்சா எண்ணெய், 200 அமெரிக்க டாலர்கள் வரை அதிகரிக்கலாம் என உலக வங்கி எச்சரித்துள்ளது.
இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், நாட்டின் எரிபொருள் தேவையை குறைக்க வேண்டியது அவசியமாகிறது. வாகன போக்குவரத்திற்கு அதிகமான அளவில் எரிபொருள் செலவிடப்படுகிறது. குறிப்பாக, சரக்கு போக்குவரத்திற்கு கூடுதல் எரிபொருள் செலவு செய்யப்படுகிறது. இந்நிலையில், மாற்று ஏற்பாடுகள் மூலம் நாட்டின் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை சீர் செய்தால் மட்டுமே, அடுத்த சில ஆண்டுகளில் ஏற்படப் போகும் கச்சா எண்ணெய் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். இதற்கு நாட்டில் உள்ள நதிகளை இணைப்பதும், அவற்றின் மூலம் நீர் வழிப் போக்குவரத்தை ஏற்படுத்துவதும் மட்டுமே ஒரே தீர்வாக அமையும்.
நாட்டின் வட பகுதியிலும், மத்தியிலும் ஜீவநதிகள் உள்ளன. மழை காலங்களில் இவற்றில் பெரும் வெள்ளம் ஏற்படுகிறது. இதனால், கிடைக்கும் நீர் வீணாக ஓடி கடலில் கலக்கிறது. இந்நிலையில், தேசிய அளவில் நதிகளை இணைப்பதன் மூலம், கடலில் வீணாகும் மழை நீரை சேமித்து, பாசனம் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும். மேலும், நதிகளை இணைக்கும் கால்வாய்கள் மூலம் நீர் வழிப் போக்குவரத்தை செயல்படுத்த முடியும். மிகவும் பிரம்மாண்டமாக தோற்றமளிக்கும் இத்திட்டம், தமிழகத்தை போல ஒவ்வொரு மாநிலமும் செயல்படுத்த துவங்கினால் முடிக்கக்கூடிய ஒன்று தான் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
"நேஷனல் வாட்டர் வேஸ்ட் பிராஜெக்ட்' என்ற பெயரில் பேராசிரியர் ஏ.சி.காமராஜ் தலைமையிலான ஒரு வல்லுனர் குழு இந்திய நதிகளை இணைப்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. இதில், நதிநீர் இணைப்பு என்பது மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை, 1. இமயமலைநீர்வழி, 2.மத்திய நீர்வழி, 3. தெற்கு நீர்வழி . வற்றாத ஜீவநதிகளான கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய நதிகளை கொண்ட இமயமலை நீர்வழி என்பது நான்காயிரத்து 500 கி.மீ., நீளம் கொண்டது. கங்கையின் தென்பகுதி மகாநதி, நர்மதா மற்றும் தபதி ஆகிய நதிகளை கொண்ட மத்திய நீர்வழி ஐந்தாயிரத்து 750 கி.மீ., மற்றும் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகிய நதிகள் கொண்ட தெற்கு நீர்வழி என்பது நான்காயிரத்து 650 கி.மீ., நீளம் கொண்டது.
பொதுவாக, முந்தைய நதிநீர் இணைப்பு என்ற திட்டத்திற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. தங்கள் மாநிலங்களில் ஓடும் நதிகளை பங்கு போடுவது என்பதற்கு அவை ஒத்துக் கொள்ளவில்லை. மேலும், இவ்வளவு பெரிய திட்டத்திற்கு நிதி ஒதுக்குவது என்பதும் ஒரு சவாலான பிரச்னையாகவே இருந்து வருகிறது. இதனால், நதிநீர் இணைப்பு என்பது மிக சிக்கலான ஒரு திட்டமாக இன்று வரை கருதப்படுகிறது. ஆனால், நாட்டின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாநிலங்களையும் இந்த விஷயத்தில் ஈடுபட வைப்பது மத்திய அரசின் முக்கிய கடமையாக மாறிவிட்டது.
நன்றி : தினமலர்
வணக்கம் தமிழா ......!!
Posted On at by citizen
வெள்ளையனை விரட்டி அடித்த
நம் மக்கள்.....அவனது மொழியாம்
ஆங்கிலயேத்திர்க்கு
அடிமை பட்டு விட்டனர்..................!!!
நம் தமிழின் பெருமையை உணர்த்த
புறப்பட்ட "அடைமழையில்" ஒரு துளி
நமது " தமிழ் துளி "...............!!!


















