சென்னை விமான நிலைய வளாகத்தில் வெடிகுண்டு பீதி.....!!


சென்னை விமான நிலைய வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த வாட்டர் பில்ட்டரால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. சென்னை விமான நிலையம் பலத்த மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் நுழையும் வாகனங்கள் கடுமையாக சோதனை செய்யப்படுகின்றன.
பார்வையாளர்கள் விமான நிலையத்திற்கு உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அசம்பாவிதங்கள் நேராமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், விமான நிலையத்தின் ஒரு பகுதியில் கிடந்த ஒரு வாட்டர் பில்டர், வெடிகுண்டு பீதியை நேற்று ஏற்படுத்தியது.
பன்னாட்டு முனையத்தின் ஒரு பகுதியில், தற்போது கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இங்கு, நேற்று காலை 10 மணிக்கு கேட்பாரற்ற நிலையில், பல மணி நேரமாக ஒரு பேப்பர் பை கிடந்தது. நீண்ட நேரமாக கிடந்த அந்தப் பையை அருகில் சென்று பார்த்த போது, அதில் ஒயர்கள் சுற்றிய நிலையில் சில பொருட்கள் இருப்பது தெரிந்தது. அது வெடிகுண்டாக இருக்குமோ என்று பீதி கிளம்பியது. தகவல் அறிந்த வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் குறிப்பிட்ட பையை பாதுகாப்பாக கைப்பற்றி, சோதனையிட்டனர். அதில், பைக்குள் வாட்டர் பில்டரும், அதற்கான பாகங்களும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதுவரை அங்கு நிலவிவந்த வெடிகுண்டு பீதி முடிவுக்கு வந்தது.
நன்றி:தினமலர்

Posted in |

0 comments: