கூட்டணி குறித்து ஜெயலலிதா முக்கிய முடிவு.....??
Posted On 8/10/08 at by citizenஅடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இப்போதே கூட்டணி அச்சாரம் போடத் துவங்கிவிட்டன. காங்கிரஸ், பா.ஜ., என்ற இரு தேசிய கட்சிகளின் தலைமையில் உள்ள அணிகளுக்கு மாற்றாக, மூன்றாவது அணி, தேசிய அளவில் உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி தலைமையில் ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தனது தலைமையில் "தேர்தலுக்கு முன்பு; தேர்தலுக்கு பின்பு' என்ற அடிப்படையில் கூட்டணி அமைக்க முடிவு செய்திருப்பதால், தமிழகத்தில் அணி மாற்றம் உறுதியாகியுள்ளது.
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தனது தலைமையில் "தேர்தலுக்கு முன்பு; தேர்தலுக்கு பின்பு' என்ற அடிப்படையில் கூட்டணி அமைக்க முடிவு செய்திருப்பதால், தமிழகத்தில் அணி மாற்றம் உறுதியாகியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க., அணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும், அ.தி.மு.க., அணியில் ம.தி.மு.க., தேசிய லீக் ஆகிய கட்சிகளும் தற்போது இருக்கின்றன. அ.தி.மு.க., அணியில் பா.ஜ., இடம்பெற விரும்புகிறது. ஆனால், அ.தி.மு.க.,விடமிருந்து "கிரீன் சிக்னல்' கிடைக்கவில்லை. மாயாவதி தலைமையில், தேசிய அளவில் மூன்றாவது அணி அமைந்துள்ளதால், தமிழகத்தில் உள்ள அரசியல் கூட்டணியிலும் அணி மாற்றம் இருக்கும் என நம்புகிறது அ.தி.மு.க., வட்டாரம். அதாவது ஜெயலலிதா தனது தலைமையில், தேர்தலுக்கு முன்பு (தே.மு.,) தேர்தலுக்கு பின்பு (தே.பி.,) என்ற கூட்டணி பார்முலாவை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.தேர்தலுக்கு முன்பு, தமக்கு ஒத்துவரும் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைத்துவிட்டு, தேர்தல் முடிவு தெரிந்த பிறகு, மத்திய ஆட்சியில் இடம்பெறுவதற்குரிய வகையில் கூட்டணியை வைக்க அவர் திட்டமிட்டள்ளார்.தி.மு.க., கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகளை தனது அணிக்கு கொண்டுவர அ.தி.மு.க., விரும்புகிறது. காங்கிரசை விட்டு பிரிவதில்லை என தி.மு.க., கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதால், இடதுசாரிகளும் அ.தி.மு.க., கூட்டணிக்கான கதவைத் திறந்துவைத்துள்ளனர்.
சமீபத்தில் பிரகாஷ் கராத் அளித்த பேட்டி ஒன்றில், "தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு பிற மாநிலங்களில் ஒரு நிலைப்பாடு என்பது கடந்த காலத்தில் மேற்கொண்டு இருக்கலாம். ஆனால், அதில் எங்களுக்கு இப்போது உடன்பாடில்லை. காங்கிரசுடனும் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைவதற்கு துணைபோகிற கட்சிகளுடனும் நாங்கள் தேர்தல் உறவு வைத்துக்கொள்ள மாட்டோம்' என தெரிவித்துள்ளார்.கடந்த 6, 7ம் தேதிகளில் புதுக்கோட்டையில் நடந்த மாநிலக் குழுக் கூட்டத்தில், இந்த விஷயம் தெளிவாக்கப்பட்டுள்ளது. "காங்கிரஸ், பா.ஜ., ஆகிய கட்சிகளுடன் மற்ற கட்சிகள் கொண்டுள்ள உறவைப் பொறுத்தே, அந்தக் கட்சிகளுடனான தனது நிலைப் பாட்டை தீர்மானிப்போம். மத்திய குழு எடுத்துள்ள இந்த முடிவின் திசையிலேயே தமிழக அரசியல் கட்சிகளுடனான உறவுகளும் அமையும் என்பதை தெளிவுபடுத்துகிறோம்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பா.ஜ., வுடன் உறவு வைத்துக் கொண்டால், சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெற முடியாது; இடதுசாரிகளுடன் கூட்டணி வைக்க முடியாது என்பதால் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி என்ற முடிவை ஜெயலலிதா எடுத்துள்ளார்.
இந்த முடிவு முழுவடிவம் பெறும்போது, தேசிய அளவில் இருப்பது போல் தமிழகத்திலும் மூன்று அணிகள் உருவாகுவதை தவிர்க்க முடியாது.
நன்றி : தினமலர்
