ரஜினிகாந்த் பேச்சால் வசூல் குறைந்தது : தியேட்டர் உரிமையாளர்கள்
Posted On 8/10/08 at by citizenமதுரை: ரஜினிகாந்த் நடித்த "குசேலன்' படத்தால் நஷ்டம் அடைந்திருப்பதாகக் கூறி, மதுரையில் நேற்று, பிரமிட் சாய்மீரா தயாரிப்பு நிறுவனத்தை, தியேட்டர் உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். ஜினியின் "குசேலன்' படம், மதுரையில் ஐந்து தியேட்டர்களிலும், தென் மாவட்டங்களில் 26 தியேட்டர்களிலும் திரையிடப்பட்டுள்ளது. பிரமிட் சாய்மீரா மற்றும் கவிதாலயா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், திரையிடுவது தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது, "முழுக்க முழுக்க இது ரஜினி படம். "சிவாஜியை' விட ஒரு மடங்கு வசூல் அதிகரிக்கும்' என்று கூறி "மினிமம் கியாரண்டி முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
படம் ரிலீசாவதற்கு சில நாட்களுக்கு முன், "குசேலன் ' படம் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், "இப்படத்தில் எனது பங்கு 25 சதவீதம் தான். இது ரஜினிகாந்த் படம் அல்ல; பசுபதி படம்' என்று கூறியிருந்தார். இதனால், தியேட்டருக்கு ரசிகர்களின் வருகை குறைவாக இருப்பதாகவும், பட ரிலீசுக்கு முதல்நாள் கன்னடர்களை சமாதானம் செய்து ரஜினி அளித்த பேட்டியால், வசூல் பெருமளவு பாதித்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, தியேட்டர் உரிமையாளர்கள், மதுரையிலுள்ள பிரமிட் சாய்மீரா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
தியேட்டர் உரிமையாளர்கள் கூறியதாவது : படத்தை திரையிட நாங்கள் பணம் கட்டிய பிறகு ரஜினி பேட்டி அளித்தார். இதனால், போட்ட காசை எடுக்க முடியவில்லை. வங்கிகள் மற்றும் தனியார் பைனான்சியர்களிடம் 75 சதவீதம் கடன் வாங்கி இப்படத்தை திரையிட்டுள்ளோம். இதுவரை வட்டியுடன் சேர்த்து 90 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எங்களது நிலைமை கருதி "மினிமம் கியாரண்டியை' டெபாசிட் தொகையாக மாற்றி, வருவாயில் எங்களுக்குண்டான சதவீதத்தை கணக்கிட்டு தரவேண்டும். இல்லாவிட்டால், 12ம் தேதி, சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் முன், உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம். ரஜினி இவ்விஷயத்தில் தலையிட்டு பகிரங்க அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு தியேட்டர் உரிமையாளர்கள் கூறினர்.