முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம்..!!!
Posted On 7/14/08 at by citizen
முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என, பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற கலைஞர் தமிழ்ப் பேரவை தொடக்க விழா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கலைஞர் தமிழ்ப் பேரவையின் திருநெல்வேலி மாவட்டக் கிளை தொடக்க விழா கூட்டம் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் மு. ஜோதிமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில அமைப்பாளர் திருநாவுக்கரசு கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழுக்காக தொடர்ந்து பணி செய்து வரும் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். பேரவைக்கு உறுப்பினர்களாக மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் பேரை சேர்க்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக மாற்றவும், தமிழை மத்திய ஆட்சி மொழியாக்கவும் மத்திய அரசு வலியுறுத்தி தமிழர்களை ஒன்று திரட்ட வேண்டும்.
அண்ணாவின் பிறந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கவியரங்கம், கருத்தரங்கம், சிறப்புச் சொற்பொழிவு போன்றவற்றை நடத்த வேண்டும். துணை மேயர் கா. முத்துராமலிங்கம், மானூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஆ.க. மணி, வழக்கறிஞர் ரவீந்திரநாத், திருநெல்வேலி- தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழுத் தலைவர் கணேசன், பேரவையின் மாநிலச் செயலர் பி. சதீஷ், துணைச் செயலர் பி.எஸ். விஜயராகவன், மதுரை மாநகர் மாவட்ட அமைப்பாளர் மணி, மதுரை மாவட்டத் தலைவர் ராஜா உள்ளிட்டோர் பேசினர்.